முந்தய பக்கம்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7 Jan 2026, 4:05 pm
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கோவை, ஜன.7- கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஓய்வூதியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த ஊழியர்களுக்கான நிதி ஒதுக் கீட்டை குறைக்கக்கூடாது. பிஎஸ்என்எல் சேவையை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று கோவை &nbsp;முதன்மை பொது மேலாளர் அலுவலகத் தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழி யர்கள், ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங் கிணைப்புக்குழு தலைவர் ஏ.குடியரசு தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அப்துல் முத்தலிப் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க மாநிலச் செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்திப் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் ஏ.ஏஸ். சரவணன் நன்றி கூறினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram