கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
23 Mar 2026, 5:33 pm

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா

கோவை, மார்ச் 23- பிஎஸ்என்எல் நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக பிஎஸ் என்எல் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோவையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்தை காலதாமதமின்றி ஏற்படுத்த வேண்டும். தேசிய பண மாக்கல் திட்டம் 2.0-வை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்ணா நடை பெற்றது. கோவை மாவட்ட முதன்மை தொலை பேசி நிலையத்தின் முன்பாக பிஎஸ்என்எல் ஒருங் கிணைப்புக் குழு சார்பில் திங்களன்று நடைபெற்ற போராட்டத்திற்கு, பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.குடியரசு தலைமை ஏற்றார். இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலை வர் எஸ்.மகேஸ்வரன், அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.பாஷா, ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் வி. வெங்கட்ராமன், உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக் குழு ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கே.பங்கஜவல்லி உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்ட பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திங்களன்று மாலை நேர தர்ணா ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த தர்ணா விற்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எம்.நடராஜன் தலைமை ஏற்றார். இதில், ஓய்வூதியர் சங்க செயலா ளர் சி.பரமசிவம், ஈரோடு மேற்கு கிளைச் செயலர் பி.சௌந்தரராஜன், ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் எஸ்.பாலு , ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் எம்.சையத் இத்ரீஸ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணை தலைவர் கே.கிட்டுசாமி, ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்புச் செயலாளர் என்.குப்பு சாமி ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பு குழு இணை கன்வீனர் கே.பழனிசாமி நன்றி கூறினார்.

பம்புசெட் மூலப்பொருள் விலை உயர்வு சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம்

கோவை, மார்ச் 23- தாமிரம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள தால், பம்புசெட் உற்பத்தித் தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA) கவலை தெரி வித்துள்ளது. இது தொடர்பாகச் சங்கத்தின் தலைவர் மிதுன் ராம்தாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கடந்த 6 மாதங்களாக பம்புசெட் உற்பத்திக் குத் தேவையான தாமிரத்தின் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள் ளார். ஒரு கிலோ ரூ. 850 ஆக இருந்த தாமிரம் தற்போது ரூ. 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், அலுமினி யம், எஃகு, வார்ப்பிரும்பு மற்றும் கேபிள்களின் விலையும் 20 சத வீதத்திற்கும் மேல் உயர்ந்துள் ளது உற்பத்தியாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது. இந்த கடும் விலை உயர்வால் லாப வரம்பு முற்றிலுமாக சரிந்துள் ளதோடு, சிறு, குறு மற்றும் நடுத் தர (MSME) பம்புசெட் உற்பத்தி யாளர்கள் தங்கள் வாழ்வாதா ரத்தை இழக்கும் நிலைக்குத் தள் ளப்பட்டுள்ளனர். இந்த சூழலை சமாளிக்க, உற்பத்தியாளர்கள் ஏற் கெனவே 10 சதவீத விலை உயர்வை அமல்படுத்தியுள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் மேலும் 10 சதவீதம் வரை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதியும், இத்தொழிலைப் பாது காக்கவும் பம்புசெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலி ருந்து 5 சதவீதமாக குறைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், குறுந்தொழில் நிறுவனங் களுக்கு சிறப்புச் செயல் மூல தனக் கடன் வசதி, கடன் வரம்பு அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட் கள் மீதான பாதுகாப்பு வரிகளை நீக்க ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சீமா கோரிக்கை விடுத்துள்ளது.

பாத்திரத் தொழிலாளர் கூலி உயர்வு ஒப்பந்தம் காலதாமதம்; அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க கூட்டு கமிட்டிக்கு ஒப்புதல்

திருப்பூர், மார்ச் 23 - திருப்பூர் பகுதி பாத்திரத் தொழி லாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந் தம் நிறைவேற்ற பாத்திர உற்பத்தி யாளர் சங்கத்தினர் கால தாமதம் செய்து வருகின்றனர். எனவே நியாய மான உடன்பாடு ஏற்படாவிட்டால், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க பாத்திரத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக்கு சிறப்பு பேர வைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் சாலையில் உள்ள காமாட்சியம்மன் பாத்திரத் தொழிலாளர் சங்க மண்டபத்தில் அனைத்து சங்க பாத்திரத் தொழி லாளர்கள் சிறப்பு பேரவைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. பாத்திரத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுத் தலைவர் வேலுச்சாமி (எல்பிஎப்) தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு பாத்திர தொழிற்சங்கத் தலைவர் குபேந்தி ரன், செயலாளர் குப்புசாமி, எல்பிஎப் மணிமாறன், ஏஐடியுசி செல்வராஜ், நாகராஜ், ஏடிபி குணசேகரன், விஜய குமார், ஐஎன்டியுசி வி.ஆர்.ஈஸ்வ ரன், எச்எம்எஸ் பாண்டியன், காமாட் சியம்மன் சங்க நிர்வாகிகள் அர்ச்சு னன், ஆறுமுகசாமி, பிஎம்எஸ் சீனி வாசன், நாராயணன் ஆகியோர் பங் கேற்று பாத்திரத் தொழிலாளர் கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து உரையாற் றினர். இதில் நானூறுக்கும் மேற்பட்ட பாத்திரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பாத்தி ரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் நிறைவடைந்து, அடுத்தக்கட்ட கூலி உயர்வுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளைக் கொடுத்துள்ள னர். இந்த கோரிக்கைகள் மீது தொழி லாளர் துறை உதவி ஆணையர் முன் னிலையில் பல கட்டப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் நியாய மான, சுமூகமான உடன்பாடு உரு வாகவில்லை. கூலி உயர்வு ஒப்பந் தம் நிறைவேற்றுவதில் உரிய முன் னேற்றம் ஏற்படவில்லை. இந்த விச யத்தில் நியாயமான கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த முன்வராமல் பாத்திர உற்பத்தியாளர் சங்கங்கள் கால தாமதம் செய்வது சரியல்ல. வரும் 26ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக மான முறையில் நியாயமான கூலி உயர்வு வழங்க பாத்திர உற்பத்தியா ளர் சங்க நிர்வாகிகள் முன்வர வேண் டும் என பாத்திரத் தொழிற்சங்கக் கூட் டு்ககுழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஏற்ப டக்கூடிய முன்னேற்றத்தைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பாத்திரத் தொழிற்சங்கங்க ளின் கூட்டுக்குழு ஆலோசித்து முடிவு செய்யலாம் என்று இந்த சிறப்புப் பேரவையில் ஒருமனதாக தீர்மா னிக்கப்பட்டது. இப்பேரவையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங் கராஜ் நிறைவுரை ஆற்றினார். கூட் டுக்கமிட்டிச் செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

வனவிலங்கு அச்சுறுத்தல் மற்றும் பயிர் சேதம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை!

உதகை, மார்ச் 23- நீலகிரி மாவட்டத்தில் ஆட்கொல்லி புலி அச்சுறுத்தல் மற்றும் யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என நீலகிரி பண் டைய பழங்குடியினர் பேரவை அர சுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. உதகையில் உள்ள தோடர் சமு தாய முன்னேற்ற சங்கத் தலைவர் மந் தேஸ்குட்டன் தலைமையில் நீலகிரி பண்டைய பழங்குடியினர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரவை தலைவர் ஆல்வாஸ், செயலாளர் புஷ்பகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு மற் றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இப்பகுதியில் பொதுமக்களின் உயி ருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆட் கொல்லி புலியை விரைந்து கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும். நீண்ட நாட்களாக இப்பகுதி மக்கள் அச்சத்து டன் வாழ்ந்து வருவதால், வனத்துறை இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண் டும். ஆட்கொல்லி புலியினால் உயிரி ழந்த இரண்டு நபர்களின் குடும்பத் தினருக்கு, வனத்துறை மூலம் வழங் கப்படுவதாகக் கூறப்பட்ட அரசு வேலை வாய்ப்பை உடனடியாக வழங்க வேண் டும். கடந்த ஓராண்டாக தோடர் பழங்கு டியினர் வசிக்கும் ’மந்து’ பகுதிக ளில் புகுந்து யானைகள் காய்கறி பயிர்களை தொடர்ந்து சேதப்ப டுத்தி வருகின்றன. இதனால் விவசாயி களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற் பட்டுள்ளது. யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்ப தோடு, விவசாயிகளுக்கு உரிய இழப் பீட்டுத் தொகையை வழங்க வேண் டும். கிராமங்களின் அருகே அச்சுறுத்த லாக உள்ள தேவையற்ற மர வகை களை அகற்றுவதன் மூலம் வனவிலங்கு கள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியும். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மரங்களை அகற்றுவதை விடுத்து, குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள புதர்களையும் தேவையற்ற மரங்களையும் அகற்றினால் மட்டுமே பழங்குடியின மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பழங்குடியின மக்களின் இக்கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இதற்கான பொது ஆதரவைத் திரட்ட வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி கள், வியாபாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், வரும் 25-ம் தேதி உதகை சேரிங்கிராஸில் உள்ள தோடர் சமுதாயக் கூடத்தில் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வும் முடிவெடுக்கப்பட்டது.

ஜல் ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாயில் குடிநீர் வராததால் மக்கள் அவதி

தருமபுரி, மார்ச் 23- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பாகல் அள்ளி ஊராட்சி, தண்டுகாரம்பட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் வராத தால், பொதுமக்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். தண்டுகாரம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே பொதுக் குழாய்கள் மூலம் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நி லையில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சுமார் 100 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. உரிய திட்டமிடல் இல்லாமல் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுக ளுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரு வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு சில வீடுகளுக்கு தண்ணீர் வராத நிலையில், வேறு வழி யின்றி பழைய அடிபம்புகளை தேடிச் சென்று தண்ணீர் பிடிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குழாய் இணைப்புகளில் ஏற்பட் டுள்ள முறையற்ற சீரமைப்பு காரண மாக, பல இடங்களில் குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. மேலும், ”நிதி யில்லை” என்ற ஒற்றைப் பதிலைக் கூறி ஊராட்சி நிர்வாகம் தட்டிக்கழிப் பதாக கிராம மக்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர். ”குழாயில் தண்ணீரே வராதபோது, எதற்காக நாங்கள் குடிநீர் வரி கட்ட வேண்டும்?” என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பும் தண்டுகாரம்பட்டி மக்கள், மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு, ஜல் ஜீவன் திட்டத் தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து இணைப்புகளிலும் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தவ றும் பட்சத்தில், போராட்டங்களை முன்னெடுப்போம் என்கின்றனர் இப்பகுதியினர்.

ஆர்டர்லி முறையைத் தடுக்க குழு

ஈரோடு, மார்ச் 23- ஈரோடு மாவட்டத்தில் ஆர்டர்லி முறையைத் தடுக்க மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி விடுத் துள்ள செய்திக்குறிப்பில், உயர் காவல்துறை அதிகாரிகள் வீடு அல்லது தனிப்பட்ட பணிகளுக்காக காவலரை நியமித்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். அரசாணைப்படி இதனை ஒழிக்கும் விதமாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, காவல் துறையில் ஆர்டர்லி முறை இருப்பதாக காவலர்களோ, பொதுமக்களோ அறிந் தால் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சியர் அலுவல கம், ஈரோடு மாவட்டம்.638011 என்ற முகவரியிலும், collrerd@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 0424 2260221 என்ற தொலைபேசி எண்ணிலும், 97917 88852 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிநாசியில் நிலவும் குடிநீர் பிரச்சனை அவிநாசி, மார்ச் 23- அவிநாசியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் திங்களன்று மனு அளித்துள்ளனர். அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம், புதுப்பாளை யம், செம்பியநல்லூர், கணியாம்பூண்டி, சின்னேரிபாளை யம், பழங்கரை, தெக்கலூர், குப்பாண்டம்பாளையம் உள் ளிட்ட கிராமப் பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலை யில் கடந்த இரண்டு மாதங்களாக சரிவர தண்ணீர் விநியோ கம் இல்லாமல் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். கோடை காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அவி நாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனு போட்டுள்ளனர். மேலும் அலுவலர்களை சந்தித்தும் வலியுறுத்தினர். மேட்டுப்பாளையம் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் இப்பிரச் சனை நீடித்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தி டம் தெரிவித்துள்ளோம். விரைவில் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். அதேபோல் பவானி ஆற்றில் இருந்து 708 டிஎம்சி தண்ணீர் பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையம், தேவம்பாளையம், குளத்துப்பாளையம், வேலூர், அவினாசி லிங்கம்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்கு தண்ணீர் விநியோ கம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மார்ச் 8 ஆம் தேதி முதல் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மனு அளித்துள்ளார்.

பல்லடத்தில் ஹெராயின் பறிமுதல் பீகார் இளைஞர் கைது திருப்பூர், மார்ச் 23 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 11 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சனிக்கிழமை திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்துறையினர் பல்லடம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்றிருந்த பீகார் மாநி லத்தைச் சேர்ந்த பூஷன் குமார் (24) என்பவரை பிடித்து விசா ரித்தனர். அவரிடம் இருந்து 11 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு பீகாரிலிருந்து திருப்பூர் நகருக்கு வருகை தந்தது தெரிய வந்தது. சட்டவிரோதமான ஹெராயின் போதைப்பொருள் வைத்தி ருந்ததால் பூசன் குமாரை, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட் டார்.

பறக்கும்படை சோதனையில் ரூ.50 ஆயிரம் பறிமுதல் திருப்பூர், மார்ச் 23 - திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஆறு குழுக்களாக பிரிந்து இரவு, பகலாக தாராபு ரம், அலங்கியம், மூலனூர், குண்டடம் ஆகிய பகுதிகளில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலை யில் குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சொகுசு காரில் வந்த திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் (54) ஜே. சி.பி ஆப்பரேட்டர் கட்டிடப் பணிக்காக ரூ.50 ஆயிரம் பணத்தை காரில் எடுத்துச் சென்றபோது பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத நிலையில் அந்த பணத்தை திருப்பூர் மாவட்ட கருவூ லத்தில் ஒப்படைத்தனர்.

அரசு வழங்கிய பட்டா இடத்தில் வீடு கட்ட தனிநபர்கள் தடுப்பு: உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 23 - திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட் டத்தில் அண்மையில் வீடில்லாத பட்டிய லின மக்களுக்கு வழங்கப்பட்ட இல வச வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் அளந்து விடப்பட்ட நிலையில் சில தனி நபர்கள் அந்த மக்கள் வீடு கட்ட தடுத்து வருகிறார்கள். எனவே ஆதிதிராவிட மக் கள் பெற்ற வீட்டுமனைப் பட்டா இடத் தில் தங்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வா கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. காங்கேயம் வட்டம் பழைய கோட்டை ஊராட்சி கிழக்குச் சேம வலசு பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கடந்த மார்ச் 9 அன்று இந்த தொகுதி எம்எல்ஏவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனால் வழங்கப்பட்டது. குறிப்பாக, வீட்டுமனைப் பட்டா பெற்ற கலைச்செல்வி விஜயகுமார், சுந்தரி ரவிக்குமார், வைதேகி ஈஸ்வரன், ரேவதி பிரகாசம், அனுசியா சசிகுமார், பிரேமா பிரகாஷ், சாந்தி வெள்ளிங்கிரி, புவனா இளங்கோ, காந்திமதி பழனிச் சாமி, கவிதா தங்கவேல், சரஸ்வதி லோகநாதன், அம்சா சக்திவேல் ஆகிய 12 நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவ லர், நில அளவையாளர்கள் அவர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து கொடுத்திருக்கிறார்கள். அந்த இடத் தில் இந்த மக்கள் சொந்த வீடு கட்டு வதற்கு, அங்குள்ள சில குறிப்பிட்ட நபர் கள் தடுத்து வருவதாகவும், அவர்கள் மீது அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மக்கள் அச்சு றுத்தல் இல்லாமல் வீடு கட்டுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நத்தக்காடையூர் பகுதி கிளை சார்பில் இரா.செல்வராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.