பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல்
4 Nov 2026, 10:02 pm

பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல்

திரிபுராவில் பாஜக ஆட்சியில் எல்லை பாதுகாப்புப் படை (BSF)வீரர்கள் பாதுகாப்பு அற்ற நிலையில் இருக்கிறார்கள்.

அம்மாநிலத்தின், 3 பிஎஸ்எஃப் வீரர்கள் மீது கடத்தல்காரர்கள் மீகக் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவ்வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்களை காப்பாற்றமுயன்ற செய்தியாளர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 2 (திங்கள்கிழமை) காலை, சிபாஹிஜலா மாவட்டத்தில் ஆஷாபாரி எல்லைச் சோதனைச் சாவடிஅருகே கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், 49 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த பிஎஸ்எஃப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். சந்தேகத்தின்அடிப்படையில் ஒரு இளைஞரைப் பிடித்து அவர்கள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்தபிஎஸ்எஃப் வாகனத்தைச் சூழ்ந்த கும்பல், அதிகாரிகளை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கியதுடன், அவர்களின் ஆயுதங்களைப் பறித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 3 பிஎஸ்எஃப் வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், செய்தியாளர்கள் தாக்குதல்காரர்களிடமிருந்து ஒரு துப்பாக்கியை மீட்டு பிஎஸ்எஃப் வீரர்களிடம் ஒப்படைத்தனர். தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் வாகனம் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டது.இத்தாக்குதலில் உள்ளூர் கடத்தல்காரர்களுடன் சேர்த்து வங்கதேச நாட்டினருக்கும் தொடர்பிருப்பதாக பிஎஸ்எஃப் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.