தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரையண்ட் நகரில் தரமற்ற பேவர் பிளாக் நடைபாதை சிபிஎம் குற்றச்சாட்டு

19 Jul 2026, 10:21 pm
பிரையண்ட் நகரில் தரமற்ற பேவர் பிளாக் நடைபாதை  சிபிஎம் குற்றச்சாட்டு
<p><strong>பிரையண்ட் நகரில் தரமற்ற பேவர் பிளாக் நடைபாதை சிபிஎம் குற்றச்சாட்டு</strong></p><p>தூத்துக்குடி, ஜூலை 19- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் நடைபாதை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம். எஸ்.முத்து குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் தரமாகவும் நீடித்த பயன்பாட்டுடனும் இருக்க வேண்டும் . ஆனால், பிரையண்ட் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் நடைபாதை தரநிலைகளைப் பின்பற்றாமல் அமைக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் கற்கள் சரிவர பதிக்கப்படாமல் , சாலைக்கும் கற்கள் பதித்த பகுதிக்கும் பெரிய அளவில் விரிசல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை நேரில் ஆய்வு செய்து, குறைகளை சரிசெய்ய வேண்டும். தரமற்ற பேவர் பிளாக் அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடி விசாரணை நடத்தி பொறுப்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரமான முறையில் பேவர் பிளாக் நடைபாதையை மீண்டும் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.