இராஜபாளையத்தில் தூரிகை ஓவியக் கண்காட்சி
27 Dec 2025, 4:49 pm
<p><strong>இராஜபாளையத்தில் தூரிகை ஓவியக் கண்காட்சி</strong></p>
<p>இராஜபாளையம், டிச.27- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள காந்தி கலை மன்ற வளாகத்தில் அமைந்துள்ள பி.எஸ்.கே. ருக்குமணியம்மாள் அரங்கில் “தூரிகை ஓவியக் கண்காட்சி” நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஓவியர் ரா.முனியசாமி வழிகாட்டு தலின் கீழ் பயிற்சி பெற்ற மாணவ–மாணவியர்களான சாந்தினி, முகர்ஷிதா, ஹாஷினி, அருணா யாழினி, சாஸ்வதா, ருவேதா, பூங்குழலி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சித்திரங்கள், கைவண்ண ஓவியங்கள், தூரிகை ஓவியங் கள் என பல்வேறு வடிவங்களில் அமைந்த படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம் கண்காட்சி யைத் தொடங்கி வைத்து, மாணவ–மாணவியர்களின் படைப்பாற்றலை பாராட்டினார். </p>
