கறிக்கோழி விவசாயிகள் கூலி உயர்வுக்கான முத்தரப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்!
22 Jan 2026, 2:57 pm
<p><strong>கறிக்கோழி விவசாயிகள் கூலி உயர்வுக்கான முத்தரப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்!</strong></p>
<p>சென்னை, ஜன. 22 - கறிக்கோழி விவசாயிகள் போரா ட்டம் நடத்தி வரும்நிலையில், முத்த ரப்புக் கூட்டத்தை நடத்தி கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது: கறிக்கோழி விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு; தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விவசாயிகள் வளர்ப்புக்கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு ஆயிரக் கணக்கான விவசாயிகளும் பாதிக்கப் பட்டுள்ளனர். போராட்டத்தின் காரண மாக கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். முத்தரப்புக் கூட்டத்திற்கு முன்னுதாரணம் உள்ளது கோழிப் பண்ணை தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகள், இந்திய ஒப்பந்தச் சட்டம் - 1872இன் படி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்க்கின்றனர். எனவே, இதில் அரசு தலையிட்டு முத்தரப்புக் கூட்டத்தை நடத்த முடியாது என கால்நடைத் துறை இயக்குநர் மாநில அரசு சார்பில் அறிவித்துள்ளார். இது தவறான அணுகுமுறையாகும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றதற்கு முன்னுதாரணம் உள்ளது. கறிக்கோழி தொழில் நெருக்கடிக்கு தீர்வு காண்க! 21.09.2013-இல் தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை அமைச்சர் தலை மையில் முத்தரப்பு கூட்டம் நடை பெற்றது. வளர்ப்புக் கூலி, செப்டம்பர் 2013 முதல் 15 சதவிகிதம், ஜனவரி 2014 முதல் மேலும் 5 சதவிகிதம் என 20 சதவிகிதம் கூலி உயர்த்தப்பட்டது. எனவே, மாநில அரசு முத்தரப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதி களையும், நிறுவனங்களின் பிரதிநிதி களையும் அழைத்து வளர்ப்புக் கூலியை உயர்த்தவும், இத்தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும் வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.</p>
