கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்! முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த நாகை மாலி எம்எல்ஏ வலியுறுத்தல்!
23 Jan 2026, 2:42 pm
<p><strong>கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்! முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த நாகை மாலி எம்எல்ஏ வலியுறுத்தல்!</strong></p>
<p>சென்னை, ஜன. 23 - தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப் போர் தங்களுக்கு வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் கோழிக் குஞ்சு களை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்களுக்குப் பின் திரும்ப பெற்றுக் கொள்கின்றனர். இதற்காக கோழிக்கு கிலோவுக்கு ரூ. 6.50 மட்டுமே கூலியாக கொடுக்கின்றனர். இந்த கூலியை 20 ரூபாயாக உயர்த்தி தரும்படி பல்வேறு மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களில் பலரை போலீசார் தற்போது கைது செய்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப் பட்டது. இந்த தீர்மானத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி (சிபிஎம்), ஈ.ஆர். ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது (மமக), டி. ராமச்சந்திரன் (சிபிஐ) உள்ளிட்டோர் பேசினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி பேசுகையில், வளர்ப்பு கூலியாக ஒரு கிலோ கோழிக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என விவசாயி கள் போராடி வரும் நிலையில், முத்த ரப்புக் கூட்டத்தை நடத்தி அரசு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி னார். மேலும், கோழிப் பண்ணைகளுக்கு அரசு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும், கோழி வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் களைப் பாதுகாத்திட நல வாரியம் அமைத்திட வேண்டும், தமிழ்நாடு கோழி வளர்ச்சிக் கழகம் மூலம் கோழிக் குஞ்சுகளை அரசே வழங்க வேண்டும், குறைந்த அளவிலான பிரிமியம் தொகையில் காப்பீடு வசதி செய்து தர வேண்டும், மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அமைச்சர் விளக்கம் இதற்கு பதில் அளித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது, இந்த பிரச்னை கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கும் நிறு வனத்திற்கும் இடையேயான பிரச்சனை என்றும், அவர்களே கூலி மற்ற விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொண்டு வந்தார்கள் என்றும், இதற்கும் அரசுக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், முதல்வர் கவனத்திற்குச் சென்றதால் இதுகுறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் 20 ஆயிரம் விவசாயிகள் 66 நிறுவனங்களுக்காக கோழி வளர்க்கிறார்கள் என்றும், ஆண்டுக்கு 50 முதல் 55 கோடி அளவில் கோழிகள் வளர்க்கப்படு கின்றன என்றும், இந்த பிரச்சனை பேசித் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
