தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூலி உயர்வுக் கோரி மூன்றாம் நாளாக கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தம்

3 Jan 2026, 2:20 pm
கூலி உயர்வுக் கோரி மூன்றாம் நாளாக கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தம்
<p><strong>கூலி உயர்வுக் கோரி மூன்றாம் நாளாக கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தம்</strong></p> <p>திருப்பூர், ஜன.3 - கூலி உயர்வு வழங்கக் கோரி &nbsp;கறிக்கோழி பண்ணை விவசாயிகள் &nbsp;மூன்றாம் நாளாக உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், &nbsp;காங்கேயம், உடுமலை, தாராபுரம், குடிமங்கலம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வரு கின்றன. இங்குள்ள ஏராளமான விவ சாயிகள், கறிக்கோழி பண்ணைகள் அமைத்து கூலிக்குக் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர் கள் பிராய்லர் கோழி நிறுவனங்களிட மிருந்து கோழிக்குஞ்சுகளை பெற்று, 38 நாட்களுக்கு வளர்த்துக் கொடுக்கும் பணியை செய்து வரு கின்றனர். இதில் ஒரு கிலோ பிராய்லர் &nbsp;கோழிக்கு ரூ.6.50 காசு கூலியாக &nbsp;வழங்கப்படுகிறது. இந்தக் கூலி விகி தம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் கூலி உயர்த்தப்படாமலேயே உள்ளது. மூலப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், கறிக்கோழி பண்ணை விவசாயிகள் &nbsp;கடும் இழப்பைச் சந்தித்து வருவதாக &nbsp;கூறி, கூலி உயர்வு கோரி உற்பத்தி &nbsp;நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். இது குறித்து, கோழிப்பண்ணை உரிமையாளர் பள்ளிப்பாளையம் கங்கை அமரன் கூறுகையில், 5,000 சதுர அடியில் கோழிப்பண்ணை அமைப்பதற்கு ரூ.10 லட்சம் வரை தேவைப்படும். இந்தப் பண்ணைக்கு தேவையான தேங்காய் மட்டை (மஞ்சு), ஆறு மாதத்திற்கு முன்பு ரூ.5,000 முதல் 8,000 வரை விற் பனையானது. தற்போது ரூ.18 ஆயி ரத்திற்கு உயர்ந்துள்ளது. கோழிக் குஞ்சுகளின் வெப்பநிலையைச் சமநி லையில் வைத்திருக்க தேவையான அடுப்புக்கரி மூட்டைகள் ரூ.1500க்கு விற்கப்படுகின்றன. மேலும், கட்டா யமாக 10 மின்விசிறிகள், தண்ணீர் தெளிக்கும் பங்கர் (Sprinkler) சதுர &nbsp;அடிக்கு இரண்டு அமைக்க வேண் டும். 38 நாட்களில் 2.2 கிலோ கோழி &nbsp;இருந்தால் தான் ரூ.6.50 காசு தருவார் கள். அதற்குக் குறைவாக இருந்தால் &nbsp;கூலி குறைத்து வழங்குவார்கள். எப்.சி.ஆர். (Food Consumption Ratio) &nbsp;படி தீவனம் வழங்குவதில் குளறுப டிகள் இருப்பதால், கோழிக்குஞ்சு அவர்கள் கேட்கும் எடையில் வருவ தில்லை. கோழிகள் நோய்வாய்ப்பட் டால், அதற்குத் தேவையான மருந் துகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு &nbsp;செய்ய வேண்டியுள்ளது. இதனால், &nbsp;கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் &nbsp;கடும் இழப்பைச் சந்திக்க வேண்டி யுள்ளது. கடைசியாக 2020 ஆண்டு &nbsp;ரூ.1 கூலி உயர்த்தப்பட்டு, ரூ.6.50 காசு &nbsp;நிர்ணயிக்கப்பட்டது. கடைகளில் ஒரு &nbsp;கிலோ கோழி ரூ.260 விற்கபடுகிறது. &nbsp;அதை உற்பத்தி செய்யும் விவசாயி கள் இழப்பை சந்திக்கின்றனர். எனவே, பிராய்லர் கோழிகளுக்கு ரூ.20, நாட்டுக் கோழி வளர்ப்புக்கு ரூ.25, காடை ஒன்றுக்கு ரூ.7 எனக் &nbsp;கூலியை உயர்த்தி கொடுக்க வேண் டும். உடனடியாக கறிக்கோழி உற்பத் தியாளர்கள், பண்ணை விவசாயிகள் &nbsp;என முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, கூலி நிர்ணயத்தில் விரைந்து &nbsp;தீர்வு காண வேண்டும் என்று வலி யுறுத்தினார். தற்போது கறிக்கோழி தேவை அதிகரித்திருக்கிறது. உற்பத்தி குறைந்துள்ளது. நிறுவனங்கள் விலையை உயர்த்தி வாங்கிக் கொள் ளும்படி கூறியிருப்பதாக பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சின்னசாமி தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.