தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

12 Nov 2025, 3:20 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பதவிநீக்க திட்டம்

பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரின் செல்வாக்கு அந்நாட்டில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாக சமீபத்தில் சில கருத்துக்கணிப்புகள் வெளியாயின. இதனையடுத்து அவரது பதவிக்கு லேபர் கட்சியில் போட்டி உருவாகலாம் என அவரது ஆதரவாளர்களால் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் ஸ்டார்மரை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அந்நாட்டில் புது குழப்பம் உருவாகியுள்ளது.

துருக்கி ராணுவ விமான விபத்து : 20 பேர் பலி

துருக்கி நாட்டின் ராணுவ சரக்கு விமானம் ஜார்ஜியாவில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 20 பேர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் யாசர் குலர் அறிவித்துள்ளார். சி-130 ரக சரக்கு விமானம் அஜர்பைஜானில் இருந்து கிளம்பி துருக்கிக்கு செல்லும் வழியில் ஜார்ஜியா- அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக துருக்கி அறிவித்துள்ளது.

சர்வதேசச் சட்டத்தை அமெரிக்கா மீறுகிறது : பிரான்ஸ்

கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டத்தை மீறுவதாக உள்ளன என்று பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் தெரிவித்துள்ளார். ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கனடாவில் நடைபெற்றபோது அவர் இதனைக் கூறியுள்ளார். இதுவரை அமெரிக்க ராணுவம் கரீபியன் மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் பசிபிக் கடற்பகுதிகளில் 19 தாக்குதல்கள் நடத்தி 76 பேரை படுகொலை செய்துள்ளது.

நிலைபாடு மாறிய டிரம்ப் ஹெச்1-பி விசாவுக்கு ஆதரவு

ஹெச்1-பி விசாவிற்கு அதிக கட்டணம் நிர்ணயித்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டினர் அமெரிக்க வருகைக்கு எதிராக பேசி வந்த டிரம்ப் திடீரென தனது நிலைபாட்டை மாற்றியுள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் நாம் திறமையான ஊழியர்களை இங்கு கொண்டுவர வேண்டும். பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை. உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம் என்று டிரம்ப் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.