இந்துத்துவா அமைப்புக்குள் பழங்குடியினரைக் கொண்டுவர ஆர்எஸ்எஸ் - பாஜக சதி - பிருந்தா காரத்
12 Jun 2026, 8:43 pm

இந்துத்துவா அமைப்புக்குள் பழங்குடியினரைக் கொண்டுவர ஆர்எஸ்எஸ் - பாஜக சதி - பிருந்தா காரத்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் இயங்கும் ‘ஜன்ஜாதி சுரக்சா மன்ச்’ மற்றும் ‘வன்வாசி கல்யாண் ஆஷ்ரம்’ ஆகிய இரண்டு அமைப்புகளும் சமீபத்தில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பழங்குடியினர் பங்கேற்ற “ஜன்ஜாதி சம்ஸ்கிருதிக் சமகம்” (பழங்குடியின கலாச்சார ஒன்றுகூடல்) என்ற மாநாட்டை நடத்தின. பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழாவை இதற்கு அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். இம்மாநாட்டில் ஒன்றிய அமைச்சர்களும், பாஜக முதலமைச்சர்களும் பங்கேற்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இது ஒரு கலாச்சார ஒன்றுகூடல் என்று கூறப்பட்ட போதிலும், இதில் நிகழ்த்தப்பட்ட உரைகளும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் மிகக் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையாகும்.

அரசமைப்புச்சட்ட பாதுகாப்புகளைப் பறிக்கும் கோரிக்கை

‘ஜன்ஜாதி சுரக்சா மன்ச்’-இன் முக்கிய நோக்கம் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு எதிரான ஒன்றாகும். மதமாற்றம் செய்துகொண்ட அனைத்துப் பழங்குடி யினரையும் பட்டியலிலிருந்து (ST) நீக்க வேண்டும் என்பதே அதன் முக்கிய கோரிக்கையாகும். பழங்குடி யினரின் நம்பிக்கைகளை அவர்கள் இனி பின்பற்று வதில்லை என்ற அடிப்படையில், அவர்களுக்கு அரச மைப்புச்சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுவந்த சட்டரீதி யான பாதுகாப்புகளைப் பறிப்பதே இவர்களின் நோக்கமாகும்.

குறிப்பாக சத்தீஸ்கரில், மதமாற்றம் செய்து கொண்ட பழங்குடியினக் குடும்பங்களைக் குறி வைத்து இந்த அமைப்பு வன்முறைப் பிரச்சாரங்க ளை நடத்தியது. கிறிஸ்தவப் பழங்குடியினருக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள கல்லறைகளிலி ருந்து உடல்களை வலுக்கட்டாயமாகத் தோண்டி எடுக்கும் அளவிற்கு இந்த நடவடிக்கைகள் சென்றுள்ளன. உச்சநீதிமன்றம் இத்தகைய உடல் தோண்டி எடுப்பு நடவடிக்கைகளைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், பாஜக மாநில அரசுகளின் ஆதரவுடன் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பழங்குடி அடையாளம் மதத்தைச் சார்ந்ததல்ல!

இந்த மாநாட்டில், 1950ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையை முன்னிறுத்தி இக்கோரிக்கை வைக்கப்பட்டது. இந்து மதம் அல்லாத பிற மதங்களைப் பின்பற்றும் பட்டியல் சாதியினர் (SC) சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்கள் என்று அந்த ஆணை கூறுகிறது. இதே கொள்கையை பட்டி யல் பழங்குடியினருக்கும் (ST) விரிவுபடுத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும். இதற்கு, அவர்கள் “அரசியலமைப்பில் உள்ள ஒரு பலவீனம்” என்று விவரிக்கும் அம்சத்தை நீக்க வேண்டி யிருக்கும்.

ஆனால், அது பலவீனம் அல்ல; ஓர் அடிப்படை வேறுபாடாகும். பட்டியல் சாதியினரைப் போலன்றி, இந்திய அரசமைப்புச்சட்டமோ அல்லது இதர சட்டங்க ளோ பட்டியல் பழங்குடியினரின் அடையாளத்தை மதத்துடன் இணைக்கவில்லை. பழங்குடி என்ற அடையாளம் மதத்தைச் சார்ந்ததல்ல.

மாநாட்டு மேடையில், பிர்சா முண்டா படத்துடன் மறைந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ஓரோனின் படமும் இடம்பெற்றிருந்தது. கிறிஸ்தவப் பழங்குடியினரின் வேட்புமனுவை எதிர்த்து இவர் தாக்கல் செய்த மனுவை 1963இல் பாட்னா உயர்நீதிமன்றம் நிராகரித்தது. “பழங்குடி அடையாளம் மதத்தைச் சார்ந்ததல்ல” என்றும், அது இன மற்றும் சமூக உறவுமுறைகளை அடிப்படையா கக் கொண்டது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒருவர் இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ இருந்தா லும் “ஒரு ஓரோன் எப்போதும் ஓரோனாகவே நீடிக்கி றார்” என்றும், மதம் மாறிய பழங்குடியினரும் சமூகத் திருவிழாக்களில் தொடர்ந்து பங்கேற்பதாகவும் நீதி மன்றம் சுட்டிக்காட்டியது.

இந்தத் தீர்ப்பே இன்றும் நடைமுறையில் உள்ள சட்ட முன்னுதாரணமாகும். ஆனால் ‘ஜன்ஜாதி சுரக்சா மன்ச்’ இதை மாற்றியமைக்க முயல்கிறது. மதம் மாறிய குடும்பங்களைத் தனிமைப்படுத்துவது, சமூகத் திருவிழாக்களில் பங்கேற்பதிலிருந்து அவர்களை வலுக்கட்டாயமாகத் தடுப்பது, பின்னர் அவ்வாறு திணிக்கப்பட்ட விலக்கலையே அவர்கள் பழங்குடி கலாச்சாரத்தைக் கைவிட்டதற்கான சான்றாகக் காட்டு வது எனத் திட்டமிட்டு ஒரு விலக்கல் சூழலை உரு வாக்கி, அதையே ஆதாரமாக முன்வைக்கிறார்கள்.

இந்துத்துவ குறியீடுகளும் சனாதனப் போலி முழக்கமும்

அதே வேளையில், பழங்குடியினர் பரந்த “சனா தனப் பரிவாரத்தின்” ஒரு பகுதி என்ற கருத்தை இவ்விளையாட்டின் மூலம் அவர்கள் வலியுறுத்து கின்றனர். மாநாட்டில், “நாங்கள் ராமனின் பிள்ளை கள் - இது எங்களுக்கு எதிரான சதி” என்றும், “பழங்குடியினர் சனாதனத்தின் மாபெரும் மரத்தின் நிழலில் வாழ்கிறார்கள்” என்றும் முழங்கினர்.

மதம் மாறியவர்களுக்கான இவர்களின் “கர் வாப்சி” (தாய்மதம் திரும்புதல்) நிகழ்வுகள் பழங்குடி யினக் குறியீடுகளுடன் அல்லாமல், இந்துத்துவக் குறியீடுகளுடனேயே நடத்தப்படுகின்றன. இவர்க ளின் கண்ணோட்டத்தில், பழங்குடியினர் “வனவாசி கள்” ஆவர் - அதாவது, ராமனுக்கான சேவையின் மூலம் வரையறுக்கப்படும் வனவாசிகள். இவர்கள் உயர் சாதித் தெய்வங்களுக்குக் கீழ்ப்பட்டவர்களா கக் கருதப்படுகிறார்கள். பழங்குடியின கிராமங்க ளில் இந்து தெய்வச் சிலைகளுடன் கூடிய கோவில்க ளைக் கட்டுவது, உள்ளூர் தெய்வங்களை விஷ்ணு, சிவன் வடிவங்களாக மறுவரையறை செய்வது ஆகி யவை அனைத்தும், ஆதிக்க மனப்பான்மையுடன் கூடிய இந்த ‘உள்ளடக்கி உள்வாங்கும்’ (cooption) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

அரசமைப்புச்சட்டத்தின் 25ஆவது பிரிவின் கீழ், தங்கள் மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமை பழங்குடியினருக்கு உண்டு. ஒரு பழங்குடி யினர் ராமரையோ அல்லது இயேசுவையோ வழிபடு வது என்பது, ஒரு பழங்குடியினராக அவர்களுக்கி ருக்கும் அடையாளத்தின் மீது எந்தத் தாக்கத்தை யும் ஏற்படுத்தாது. இதுவே அடிப்படை அரச மைப்புச்சட்டத் தத்துவமாகும். ஆனால் இந்தத் தத்துவத்தை வளைத்து, ராமரை வழிபடுபவர் பழங்கு டியினக் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறார் என்றும், இயேசுவை வழிபடுபவர் அதற்குத் துரோ கம் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. பழங்குடியி னர் தங்களின் தனித்தன்மை, இயற்கை வழிபாடு மற்றும் உயிர்ப்பொருள் வழிபாடு (animism) சார்ந்த மரபுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனிப்பத்தி ஒதுக்கி முறையான அங்கீகாரம் கோரு வதை பாஜக அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

ஆர்எஸ்எஸ்/பாஜக இயற்கையை அழிப்பவர்கள்

இப்பிரச்சாரத்தை நவீன கால “உல்குலான்” (Ulgulan - பெரும் கிளர்ச்சி) என்று விவரிப்பதன் மூலம், அமித் ஷா இந்த நிகழ்ச்சி நிரலை மேலும் வலுப்படுத்தியுள்ளார். பிர்சா முண்டாவின் ‘உல்கு லான்’ என்பது காலனித்துவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாகும். அமித் ஷாவின் அரசியல் பின்னணி யைக் கொண்டவர்கள் ஒருபோதும் ஆங்கிலேயர்க ளை எதிர்த்துப் போராடவில்லை. மதம் மாறிய பழங்குடியினர்களுக்கு எதிரான பிரிவினைவாதப் பிரச்சாரத்திற்கு, வீரர் பிர்சாவின் பெயரையும் வர லாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தையும் பயன்படுத்து வது அவரது பாரம்பரியத்திற்குச் செய்யப்படும் துரோகமாகும். நீர், காடு, மலை ஆகியவை “எங்கள் நம்பிக்கைகளின் மையம்” என்ற ஷாவின் வார்த்தை கள் வெறும் வெற்றுப் பேச்சுக்களே.

ஷா இவ்வாறு பேசிக்கொண்டிருந்த அதே வேளை யில், ஒடிசாவின் சிஜிமாலியில் வசிக்கும் பழங்குடி யின மக்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாக்சைட் சுரங்க நடவடிக்கைகளிலிருந்து தங்கள் புனித மலையைக் காப்பாற்றப் போராடிக்கொண்டி ருந்தனர். சத்தீஸ்கரின் ஹஸ்தியோ பகுதியில், தங்கள் காடுகள் தனியார் சுரங்க நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராகப் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். கிராம சபைகளின் முடிவுகளுக்கு எதிராக, சடங்கு கள் நடத்தப்படும் ‘சால்’ மற்றும் ‘கரம்’ போன்ற புனித மரங்கள் உட்பட லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. தில்லியில் உள்ள “இயற்கை வழிபாட்டாளர்கள்” எனக் கூறிக் கொள்ளும் ஆர் எஸ்எஸ் - பாஜகவினர், உண்மையில் இயற்கையை அழிப்பதில் தான் மிகத் திறமையாகச் செயல் பட்டுள்ளனர்.

கார்ப்பரேட் நலன்களுக்கான கூட்டுச் சதி

வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) சீர்குலைக்கப்படுதல், கிராம சபையின் உரிமைகள் ஒழிக்கப்படுதல், பஞ்சாயத்து விரிவாக்க (PESA) சட்டத்தின் செயல்பாடு முடக்கப்படுதல், நிலுவை யில் உள்ள கல்வி உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை என பழங்குடியினர் எதிர்கொள் ்ளும் அவசரமான பிரச்சனைகள் ஏராளம்.

‘நீர், வனம், நிலம்’ ஆகியவற்றைத் தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டுவர கார்ப்பரேட் நிறுவனங்களு க்கு அரசு வழிவகுத்துக் கொடுப்பதை எதிர்த்து ‘ஜன்ஜாதி சுரக்சா மன்ச்’ ஒருமுறை கூட குரல் எழுப்ப வில்லை. மாறாக, மத அடிப்படையில் பழங்குடியின சமூகங்களைப் பிளவுபடுத்துவதன் மூலம், அவர்க ளை அவர்களின் வாழ்வாதாரங்களிலிருந்து வெளி யேற்றும் அதே நிறுவனங்களின் நலன்களுக்கே அது சேவை செய்துள்ளது. உரிமைகள் மறுக்கப் பட்ட மக்களைப் பிளவுபடுத்துவது என்பது மிகப் பழமையான ஒரு தந்திரமாகும்.

பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பவர்களைப் பொறுத்தவரை, இச்சவால்களை மாபெரும் பழங்குடியின வீரர்களின் உணர்வோடு, பழங்குடியினர்களின் எதிர்ப்பு மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த வலிமை யால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.