இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் குற்றச்சாட்டு
15 Jun 2026, 9:19 pm

இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் குற்றச்சாட்டு

திருச்சூர் இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண் ்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் பிருந்தா காரத் கவலை தெரி வித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த இஎம்எஸ் நினைவு கருத்த ரங்கத்தில் ‘மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசுகையில்,”மாநில சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வரு வதில் மிகவும் ஏமாற்றமளிக்கும் புள்ளிவிவரம் கேரளத்திலிருந்து வருகிறது.

இது தேசிய சராசரியை விடக் குறைவானது ஆகும். கேரள சட்டமன்றத்தில் பெண்கள் வெறும் 7.6 சதவிகிதம் மட்டுமே உள்ளனர்.

தமிழ்நாடு, அசாமில் இது எட்டு சதவிகிதமாக உள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒரு பெண் கூட இல்லை. இதுதான் இன்றைய இந்தியாவில் பெண்கள் அதிகார மளித்தலின் மாதிரி. பெண்கள் இடஒதுக்கீட்டை சீர்குலைத்தது பாஜக தான் இந்தியாவில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்போதும் சீர் குலைத்தது பாஜக தான்.

1996இல் தேசிய முன்னணி அரசாங்கத்தின் போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட திலிருந்து, பாஜக அந்த மசோதா வை வலுவிழக்கச் செய்யும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, வேறு பல கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

தொகுதி எல்லை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகைக் கணக் கெடுப்பை முடிந்தவரை தாமதப் படுத்துவதற்காக, மகளிர் இட ஒதுக்கீடு அதனுடன் இணைக்கப் பட்டது. மக்கள் தொகைக் கணக் கெடுப்பு முடிந்து, தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்படும் நேரத்தில், 2029 தேர்தல்கள் முடிந்துவிடும். கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லை நிர்ணயம் செய்ய லாம் என்று பாஜக இப்போது கூறு கிறது.

அது அரசியலமைப்புக்கு விரோதமானதும் சாத்தியமற்றது மாகும். கடந்த கூட்டத்தொடரில் எதிர்க் கட்சிகளால் ஒருமனதாகத் தோற் கடிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப் படலாம். சட்டமன்றத் தேர்தல்களு க்குப் பிறகான அரசியல் சூழலில் இந்த மசோதாவை நிறைவேற்றி விட முடியும் என்று அவர்கள் நம்பு கிறார்கள்.

திரிணாமுல் காங்கிர ஸின் வீழ்ச்சியும், இந்தியா கூட்டணி க்கும் திமுகவுக்கும் இடையிலான பிளவும் தங்களுக்குப் பயனளிக் கும் என்று பாஜகவினர் நம்பு கிறார்கள்” என பிருந்தா காரத் கூறி யுள்ளார்.