தில்லியில் கல்லூரி மாணவி மீது சட்டவிரோத அடக்குமுறை! பாஜக அரசுக்கு பிருந்தா காரத் கண்டனம்; காவல்துறை ஆணையருக்கு கடிதம்
11 Jun 2026, 8:32 pm

தில்லியில் கல்லூரி மாணவி மீது சட்டவிரோத அடக்குமுறை! பாஜக அரசுக்கு பிருந்தா காரத் கண்டனம்; காவல்துறை ஆணையருக்கு கடிதம்

தில்லியில் கல்லூரி மாணவி மீது சட்டவிரோத அடக்குமுறை! பாஜக அரசுக்கு பிருந்தா காரத் கண்டனம்; காவல்துறை ஆணையருக்கு கடிதம்காவல்துறை, கடுமையான சட்ட விரோத அடக்குமுறையை ஏவியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தில்லி காவல்துறை ஆணையர் சதிஷ் கோல்ச்சாவிற்கும் கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதன் விவரம் வருமாறு:

மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்

நியூ ராஜீந்தர் நகர் காவல்நிலை யத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான விவகாரத்தில் தில்லி காவல்துறை ஆணையரின் உடனடித் தலையீட்டையும், சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதையும் கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுது கிறேன்.

விவரங்கள் பின்வருமாறு:

1. ஜூன் 6 அன்று மதியம், எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரிந்த ஆஹானா சிங் (தந்தை : திலீப் சிங் கைத்) என்ற இளம் பெண்ணிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தில்லியில் படித்து வந்த அவர், ஜூன் 4 அன்று தனது முதுகலை பட்டப்படிப்பிற்கான இறுதித் தேர்வை முடித்திருந்தார். என்னிடம் பேசியபோது அவர் மிகுந்த மன உளைச்சலுடனும் வேதனையுடனும் காணப்பட்டார்; தான் எதிர்கொண்ட முற்றிலும் சட்டவிரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற துன்புறுத்தல் குறித்து என்னிடம் கூறினார்.

தனியிடத்தில் கூட்டமாக சூழ்ந்து விசாரணை

2. ஜூன் 5 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில், நியூ ராஜீந்தர் நகரில் உள்ள “எனிதிங் பிட்னஸ்” என்ற உடற்பயிற்சிக் கூடத்தில் (gym) அவர் இருந்தபோது, அங்கு வந்த காவல்துறையினர், ஊழியர்களிடம் அவரை அடையாளம் காட்டச் சொன்னதாகவும், பின்னர், அவர் களும் ஒரு பெண் காவலரும் ஆஹானா சிங்கை அருகிலுள்ள ‘ஸ்ரீராம் ஐஏஎஸ்’ என்னும் பயிற்சி மையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் சென்று, அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்தார். இவ்வாறு விசாரணை நடத்தியவர்களில் ‘சிவம்’ என்ற அதிகாரியையும், ரீட்டா என்ற பெண் உதவி ஆய்வாளரையும் ஆஹானா சிங் அடையாளம் கண்டுள்ளார்.

ஆஹானா சிங்கிடம் அவரது குடும்பப் பின்னணி, கல்வித் தகுதி போன்றவை குறித்துக் கேட்கப் பட்டுள்ளது. அவரது அரசியல் கருத்துக்கள் குறித்தும், திரும்பத் திரும்பக் கேள்வி எழுப்பப்பட்டதுடன், மறுநாள் நடைபெறவுள்ள ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ போராட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் மிரட்டப் பட்டுள்ளார்.

உளவாளியாகச் செயல்படுமாறும் மிரட்டல்

தான் அங்கு செல்லும் எண்ணம் ஏதுமில்லை என்று ஆஹானா சிங் கூறியபோது, “உங்களைப் பற்றியும், நீங்கள் அங்கு செல்லத் திட்டமிட்டி ருப்பது பற்றியும் எங்களுக்குத் தக வல் உள்ளது” என்று காவல்துறை யினர் கூறியுள்ளனர். மேலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் பற்றி தெரிந்தால் அவர்கள் குறித்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆஹானா சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி, அவரை ஒரு காவல் துறை உளவாளியாகச் செயல்பட வற்புறுத்தியுள்ளனர். 3. காவல்துறையினர், ஆஹானா சிங்கின் அலைபேசியையும் தங்களி டம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர். நீதிமன்ற உத்தரவு தேவை என்று கூறி ஆஹானா அலைபேசியைத் தர மறுத்து விட்டார். எனினும், துன்புறுத்தல் நின்றுவிடும் என்ற நம்பிக்கையில், தனது வாட்ஸ்அப் செய்திகளைப் காவல்துறையினரிடம் காட்டியுள்ளார். அவர் இவ்வளவு ஒத்துழைப்பு அளித்தும், தான் தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பதாகவே போலீசார் அவரை எச்சரித்துள்ளனர்.

பெண் காவலர் மூலம் கண்காணிப்பு

4. அன்று மாலை சுமார் 8 மணியள வில், ரிது என்ற பெண் காவலர் ஆஹானா சிங் வீட்டிற்குச் சென்று, அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக தான் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே, ஆஹானா சிங் அவரது இருப்பிட விவரங்களை காவல்துறையுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும், ஒருவேளை வெளியேறினால் தனது ‘லைவ் லொகேஷன்’ (நிகழ்நேர இருப்பிடத் தகவல்)-ஐப் பகிர வேண்டும் என்றும், இல்லை யெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையின் முற்றிலும் சட்ட விரோதமான இந்த நடவடிக்கை களால் ஆஹானா மிகவும் பயந்தும் போனார். 5. மறுநாளும் காலையில், குறிப் பிட்ட அந்தப் பெண் காவலர், ஆஹானா சிங்கின் வீட்டிற்குச் சென்று, அழைப்பு மணியை இடைவிடாமல் அடித்துள்ளார். தான் வீட்டிற்கு வெளியே காவல் பணியில் இருக்கப் போவதாகக் கூறிய அவர், ஆஹானா வை மீண்டும் தனது ‘லைவ் லொ கேஷன்’-ஐ அனுப்புமாறு வற்புறுத்தி யுள்ளார். அன்றைய தினம் பிற்பகுதி யில் ஆஹானா என்னை அழைத்து மேற்கூறிய நிகழ்வுகளை விவரித்தார். அப்போது, கண்ணீர் மல்கவும் மிகுந்த பதற்றத்துடனும் ஆஹானா காணப்பட்டார்.

வெளியே எங்கும் செல்லவிடாமல் வீட்டுக்காவல்!

6. நான் உடனடியாக அந்தப் பெண் காவலரான ரித்துவை அழைத்தேன். அப்போது, நியூ ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தால் தனக்கு இந்தப் பணி வழங்கப்பட்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தான் நேரில் அங்கு இல்லையென்றாலும், ஆஹானா உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து (gym) காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதையும், எந்தவொரு போராட்டத்திலும் பங்கேற்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டதை யும், ஆஹானா வீட்டை விட்டு வெளி யேறினால் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தனக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்ததை யும் அவர் ஒப்புக்கொண்டார். நான் அவரிடம் பேசிய பிறகு, காவல்துறை யிடமிருந்து ஆஹானாவிற்கு மற்றொரு அழைப்பு வந்தது; இம்முறை கிரண் என்ற நபர் ஆஹானாவை அழைத்து, அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாரா, என்று விசாரித்துள்ளார்.

மிக மோசமான காவல்துறை அத்துமீறல்

7. இது காவல்துறை அதிகா ரத்தின் மிக மோசமான மற்றும் அத்து மீறிய தவறான செயல் என்பதை நீங்கள் (காவல்துறை ஆணையர்) ஒப்புக் கொள்வீர்கள். ஒரு இளம் பெண், எந்தவிதமான பிடியாணையுமின்றி பெரும்பாலும் ஆண் காவலர்களால் அழைத்துச் செல்லப்படுகிறாள்; மீண்டும் எந்த வாரண்ட்டும் இன்றி விசாரிக்கப்படுகிறாள்; எந்த அதிகார மும் இன்றி அவளது தொலைபேசி சோதிக்கப்பட்டு அவளது தனி உரிமை மீறப்படுகிறது; மேலும் எந்தக் குற்றச்சாட்டுகளோ அல்லது விளக்கமோ இன்றி அவள் கண்கா ணிப்புக்கும், ஒருவித வீட்டுக்காவ லுக்கும் உட்படுத்தப்படுகிறாள். இது ஓர் இளம் பெண்ணுக்கு எதிராக தில்லி காவல்துறை மேற்கொண்ட முற்றிலும் சட்டவிரோதமான நடவடிக்கையாகும். உண்மையானவை மற்றும் மறுக்க முடியாதவை என்று நான் நம்பும் உண்மைகளை உங்கள் கவ னத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும், ஓர் இளம் பெண்ணைத் துன்புறுத்தவும், மிரட்டவும், பயமுறுத்தவும், கட்டாயப்படுத்தவும் சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பித்தவர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அரசியலமைப்பு உரிமைகளை பறிக்க அதிகாரம் இல்லை

தற்போது ஆஹானா ஒரு பொதுத் தேர்வுக்கான தயாரிப்புகளில் ஈடு பட்டுள்ளார்; ஆனால் அவர் அத்த கைய தயாரிப்பில் இல்லாமலிருந்து, போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்திருந்தாலும் கூட, அவ்வாறு செய்வது அவரது ஜனநாயக உரிமையாகும்; அதைத் தடுப்பதற்கு காவல்துறைக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்ய முயன்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று இதே போன்ற காவல் துறை துன்புறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட வேறு எத்தனை இளைஞர்கள் இருப் பார்கள்? ஒருபுறம், அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறும் தில்லி காவல்துறை, ‘காக்ரோச் ஜனதா கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது; மறுபுறம், அதே காவல்துறை ஆஹானா போன்ற இளைஞர்களைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அச்சுறுத்தி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.நீங்கள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு பிருந்தா காரத் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (ந.நி.)