மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் விடுதலை
3 Aug 2026, 8:20 pm

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் விடுதலை

புதுதில்லிபாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ்பூஷண் சரண் சிங், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த காலத்தில், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனைகள் தில்லி ஜந்தர் மந்தரில்தீவிர போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக, தில்லி காவல்துறை பிரிஜ் பூஷண் சரண் சிங்மற்றும் அமைப்பின் முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் மீது 2023ஆம்ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறுகடுமையான பிரிவுகளின் கீழ் சுமார் 1,500பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை தில்லி காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விசாரணையை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் அனைத்து விசாரணை மற்றும் இறுதி வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் பெருநகர நீதிபதி அஸ்வனி பன்வார் திங்களன்று தீர்ப்பளித்தார்.

அதில்,”பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.1,500பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டாலும், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் தெளிவாக இல்லை. அதனால் பிரிஜ்பூஷண் சரண் சிங் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என நீதிபதி அஸ்வனி பன்வார் தீர்ப்பு வழங்கினார்.

ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷண் சரண் சிங்பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என மல்யுத்த வீராங்கனைகள் சாட்சியங்களுடன் போராடிய நிலையில், தில்லி நீதிமன்றதீர்ப்பிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.