முந்தய பக்கம்

பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்கக்கூட்டம்

29 Jan 2026, 5:39 pm
பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்கக்கூட்டம்
<p><strong>பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்கக்கூட்டம்</strong></p> <p>நாமக்கல், ஜன.29- மோடி அரசை கண்டித்து நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் குறித்து விளக்கக் கூட்டம் திருச்செங்கோடு டி.சி.எம்.எஸ் வளாகப் பகுதியில் நடைபெற்றது. &nbsp;பாசிச மோடி அரசின், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத ஜனநாய கத்திற்கு எதிராக செயல்படும் மோடி அரசை கண்டித்து, வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி யன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் நடைபெற உள்ளது. இந்நிலை யில், இந்த மறியல் போராட்டம் குறித்து விளக்கக் கூட்டம் வியாழனன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.சி.எம்.எஸ் &nbsp;வளாகப் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு மூத்த தோழர் எஸ்.கந்தசாமி தலைமை &nbsp;தாங்கினார். சிஐடியு மாவட்டப் பொருளா ளர் எம்.ரங்கசாமி, சிபிஎம் நகரச் செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்டத் தலை வர் ஏ.ஆதிநாராயணன் உள்ளிட்டோர் சிறப்பு ரையாற்றினர். போராட்டத்தை விளக்கி சிஐ டியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி பேசினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram