முந்தய பக்கம்

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்!

20 Jun 2026, 3:25 pm
பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்!

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் தில்லியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் தில்லியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு, பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்கு மற்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் நெசாமிபூர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram