பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஈரான் மீதான போர் குறித்த விவாதம்
14 May 2026, 9:47 pm

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஈரான் மீதான போர் குறித்த விவாதம்

புதுதில்லி, மே 14 - செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதான அவ்வமைப்பின் வெளி யுறவுத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை (மே 14) துவங்கியது.

ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது தொடர்பான விவாதங்கள் இக்கூட்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

ஈரான் மீதான போர் 76-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது பிரிக்ஸ் நாடு களிடையே பிளவுகளை ஏற்படுத்தி யுள்ளது.

குறிப்பாக ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையே நிலவும் மோதல்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு இக்கூட்டத்தில் முக்கிய விவாதமாக உள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது உரையில், சர்வ தேச கடல் பகுதிகளில் “பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்சார் போக்கு வரத்து” நடைபெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “சட்ட விரோத ஆக்கிரமிப்பை” கண்டிக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ், தென்னாப்பிரிக்காவின் ரொனால்ட் லமோலா, பிரேசிலின் மௌரோ வியேரா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

டிரம்ப் சீனா சென்றுள்ளதால் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறப்படு கிறது.

எனினும் அந்நாட்டின் தூதர் சூ பெய்ஹாங் பங்கேற்றுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் போர் குறித்த விவாதங்களிலும் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தைகளே நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான அடித்தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.