முந்தய பக்கம்

மூச்சுக் காற்று! - க.சண்முகசிதம்பரம்

27 Dec 2025, 12:15 pm
மூச்சுக் காற்று!  -  க.சண்முகசிதம்பரம்
<p><strong>மூச்சுக் காற்று!</strong></p> <p>நல்ல நல்ல நூல்களை &nbsp; &nbsp; &nbsp;நாமும் வாங்கிப் படிக்கலாம்! இல்லந் தோறும் நூலகம் &nbsp; &nbsp; &nbsp; இனிமை யாகப் படைக்கலாம்! &nbsp;நூல்கள் இல்லா வீட்டிலே &nbsp; &nbsp; &nbsp; நுழையா அறிவுச் செல்வமே! ஆல்போல் தழைத்து வளர்ந்திட &nbsp; &nbsp; &nbsp; &nbsp;அறிவை வளர்க்கும் நூல்களே! &nbsp;நாளும் நல்ல நூல்களை &nbsp; &nbsp; &nbsp; நாமும் எடுத்துப் படிக்கலாம் மேலும் மேலும் அறிவினை &nbsp; &nbsp; &nbsp; மேன்மை யாக வளர்க்கலாம்! &nbsp;உயிரும் வாழ சுவாசிப்போம் &nbsp; &nbsp; &nbsp;உயர்வும் காண வாசிப்போம்! பயிலப் பயில வளம்சேரும் &nbsp; &nbsp; &nbsp; பஞ்சம் இன்றி அறிவூறும்! &nbsp;சிந்தனை ஆற்றல் பெருக்கிடும் &nbsp; &nbsp; &nbsp; செயலினைச் செய்ய உதவிடும்! முந்தியே செல்ல வைத்திடும் &nbsp; &nbsp; &nbsp; மூச்சுக் காற்றாய்ப் பயன்தரும்!</p>
Share
FacebookXWhatsAppTelegram