முந்தய பக்கம்

மார்பகப் பராமரிப்பு  சிறப்பு மையம் தொடக்கம்!

25 Feb 2026, 3:22 pm
மார்பகப் பராமரிப்பு  சிறப்பு மையம் தொடக்கம்!
<p><strong>மார்பகப் பராமரிப்பு &nbsp;சிறப்பு மையம் தொடக்கம்!</strong></p> <p>சென்னை, பிப். 25- &nbsp;சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை, மார்பகப் புற்றுநோய் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண &lsquo;சகி&rsquo; என்ற பிரத்யேக மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில் திரைக்கலைஞர் கலைமாமணி நளினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மையத்தைத் திறந்து வைத்தார். இந்த மையம் 3D மேமோகிராபி உள்ளிட்ட அதி நவீன வசதிகளுடன், நோய் கண்டறிதல் முதல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை வரை அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 வரை மேமோகிராம் பரிசோதனைகளுக்கு 50 சதவீத தள்ளுபடி மற்றும் இலவச ஆலோசனைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram