முந்தய பக்கம்

மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் தொடக்கம்

6 Oct 2026, 9:06 pm
மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் தொடக்கம்

மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் தொடக்கம்

விருதுநகர், அக்.6-விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் தொடங்கியது. முகாமை மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதாராணி தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறுகையில், “இந்தச் சிறப்பு முகாம் அக்.5 முதல் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரைநடைபெறும். பெண் மருத்துவர்கள் மூலம் மார்பகப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தேவைக் கேற்ப அல்ட்ராசவுண்ட், ஸ்கேன் மற்றும் மேமோகிராம் பரிசோதனைகள் செய்யப் படும்.மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பெண் கள் அனைவரும் இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, அறுவை சிகிச் சைத் துறைத் தலைவர் லஷ்மிநாராயணன், மருத்துவர்கள் அருண், வைஷ்ணவி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram