மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது அவசியம் நடமாடும் வாகன துவக்கவிழாவில் மருத்துவர்கள் பேச்சு
26 Jun 2026, 12:36 am
<p><strong>மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது அவசியம் நடமாடும் வாகன துவக்கவிழாவில் மருத்துவர்கள் பேச்சு</strong></p><p>சென்னை, ஜூன் 25- பெண்கள் மார்பக பரிசோதனை செய்ய ஒரு போதும் தயங்கக் கூடாது என்று சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்து வமனையின் இணை நிறுவ னர் மற்றும் செயல் இயக்கு நர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கேட்டுக் கொண்டார். காவேரி மருத்துவ மனை, சென்னை அரிமா சங்க கேவிஜி அறக்கட்ட ளையுடன் இணைந்து தனது சமூகப் பொறுப்பு திட்டத் தின் கீழ் ‘நடமாடும் மேமோ கிராம்’ வாகனச் சேவை யைத் தொடங்கியுள்ளது. இதனை மாநில உணவுத் துறை அமைச்சர் வெங்கட் ரமணன் தொடங்கிவைத் த்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் அரவிந்த் செல்வராஜ், வெளிநாடு களில் பெண்களுக்கு ஆண்டுதோறும் மார்பக பரிசோதனை செய்யப்படு கிறது. இதனால் அவர்களு க்கு புற்றுநோய் வருவது முன்கூட்டியே தடுக்கப்படு கிறது. ஒரு சிலருக்கு ஆரம்ப த்திலேய கண்டறிந்து தடுக்க ப்படுகிறது எனவே மாநில அரசும் மகளிர் அனைவரும் ஆண்டுதோறும் மார்பக பரிசோதனை செய்து கொள்வதை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை மட்டுமல்ல புற நகர்பகுதியிலும் நடமாடும் மார்பக பரிசோதனை வாகன சேவை தேவை என்று அமைச்சர் வெங்கட் ரமணன் வலியுறுத்தினார். ஒரு குடும்பத்தின் மைய மாக இருக்கக்கூடிய பெண்கள் அனைவரும் தங்களது உடல் நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். பெண்கள் தவறான புரிதலில் இருந்து விடுபட்டு மார்பக பரிசோதனை கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் கவிதா சுந்தரவதனம் கேட்டுக்கொண்டார். மார் பகப் புற்றுநோய் கண்டறி தலுக்கான டிஜிட்டல் மேமோ கிராபியுடன், இந்த நடமாடும் வாகனம் ‘பேப் ஸ்மியர்’ மற்றும் ‘கோல்போஸ் கோபி’ பரிசோதனை வசதி களையும் வழங்கும் என்றும் அவர் கூறினார்.</p>
