காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் ஆட்சியர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
23 Sept 2026, 1:09 am

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் ஆட்சியர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

திருப்பத்தூர்,செப். 22 -பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் விரிவாக்கத்தைச் சென்னை திருவான்மியூரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதி யாகத் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான விரிவாக்கத் தொடக்க நிகழ்ச்சி, திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 236 மாணவிகளுக்குக் காலை உணவினை வழங்கித் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி ஆகியோர் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.இத்திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 788 பள்ளிகளில் பயிலும் 69,098 மாணவ, மாணவிகள் பயன்பெற வுள்ளனர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திராணி, மாதிரிப் பள்ளித் தலைமை ஆசிரியர் அசோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.