தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு
9 Feb 2026, 3:02 pm
<p><strong>தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு</strong></p>
<p>இராமநாதபுரம், பிப்.9- இராமநாதபுரத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறினர். இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத் தலைவர் டி.ஆர். பிரவீன் தங்கம் மற்றும் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
