முந்தய பக்கம்

தூய்மைப்பணியாளர்களுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டம்

9 Feb 2026, 3:02 pm
தூய்மைப்பணியாளர்களுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டம்
<p><strong>தூய்மைப்பணியாளர்களுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டம்</strong></p> <p>நாமக்கல், பிப்.9- தமிழகம் முழுவதும் திங்களன்று தூய்மைப்பணியாளர்க ளுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதி யாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் துவக்க விழா நடைபெற்றது. தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு விரிவாக் கத் திட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் நடைபெற்ற காலை உணவு திட்டத்தை நகர மன்ற தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram