தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 Mar 2026, 3:42 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்!  முதல்வர் மகளிர் தின வாழ்த்து

சென்னை, மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் மகளிர் தின வாழ்த்து  செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “வெல்லும் தமிழ்ப்  பெண்களே... நீங்கள் வெல்வதற்கு உலகமும் உங்க ளுக்குத் துணை நிற்கிறது; அதோடு திமுக அரசும் உங்களுடன் இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்கள் பயணத்தின் ஒவ்வொரு  அடியிலும் திமுக அரசு உங்களுடன் இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார். மேலும், 2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப் பேற்றதிலிருந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்ட புதுமைப் பெண் திட்டம், மகளிர் விடி யல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, பிங்க் ஆட்டோ  உள்ளிட்ட திட்டங்களை விளக்கும் காணொலியையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கு 1,249 கூடுதல் பணியிடங்கள்

சென்னை, மார்ச் 8 -  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பணி களை மேற்கொள்ள 1,249 கூடுதல் பணியிடங்களை உரு வாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா  பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார்.  இந்த பணியிடங்கள் தேர்தல் நிர்வாக பணிகளை விரை வாக மேற்கொள்ளும் வகையில் தற்காலிகமாக உரு வாக்கப் பட்டுள்ளன. இப்பணியிடங்கள் ஜூன் 30 ஆம்  தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆளுநர் நியமனத்தில்  அதிரடி மாற்றங்கள் தேவை  குரியன் ஜோசப் குழு பரிந்துரை!

சென்னை, மார்ச் 8- ஒன்றிய - மாநில உறவுகளை ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு அமைத்த நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு, ஆளுநர் பதவியில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைத் துள்ளது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, ஆளுநர் பதவி ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப் படுவதைத் தடுக்கப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. நியமனம் மற்றும் நீக்க முறையில் மாற்றம் ஆளுநர் நியமன முறையில் மாநில அரசின் பங்கேற்பு  இருக்க வேண்டும் என இக்குழு வலியுறுத்தியுள்ளது. இதன்படி, மாநில அரசு மூன்று தகுதியான நபர்களை முன்மொழிய வேண்டும். மாநிலச் சட்டமன்றம் பெரும் பான்மையுடன் அவர்களை அங்கீகரித்த பின், அந்த மூவரில் ஒருவரைக் குடியரசுத் தலைவர் ஆளுநராக நியமிக்க வேண்டும். அதேபோல், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே ஆளுநரைப் பதவியிலிருந்து நீக்க முடியும் என்ற நடைமுறையைக் கொண்டு வரப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மசோதாக்களுக்குக் காலக்கெடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கோ அல்லது திருப்பி அனுப்புவதற்கோ அரசமைப்புச் சட்டத்தில் ஒரு  கட்டாயக் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். கூட்டாட்சிச் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் பதவி ஒரு அரசமைப்புப் பாதுகாவலராக மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை யில் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து கழக பணிமனையை போக்குவரத்து மற்றும்  மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  சனிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவிலேயே பள்ளிக்கூடத்திற்கு என்று தனியாக ஒரு பேருந்து  சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் சென்னையில்தொடங்கி வைத்தார். படிப்படியாக இத்திட்டம் அனைத்துப்  பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இராமேஸ் வரத்தில் இயற்கை எரிபொருளில் இயங்கக் கூடிய 12பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 720 இயற்கை எரி வாயு பேருந்துகளை வாங்குவதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.