தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

30 Jun 2026, 9:00 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

திரீல் வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில்

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது நாக் அவுட்-32 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய நேரப்படி திங்களன்று நள்ளிரவு நடை பெற்ற இரண்டாவது ‘நாக் அவுட் - 32’ சுற்று ஆட்டத்தில் பிரேசில் - ஜப் பான் அணிகள் மோதின. 5 முறை சாம்பியன் என்ற கவுரவம் பிரேசிலுக்கு இருந்தால் எங்களுக்கு என்ன? என்பது போல, தொடக்கம் முதலே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன்பலனாக ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ஜப்பானின் கைஷு சனோ கோலடித்து அசத்தி னார். முதல் பாதியில் பிரேசில் அணி பதிலுக்கு கோலடிக்கவில்லை. இத னால் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது. பதிலடி 2ஆம் பாதியில் பிரேசில் அணி யின் பயிற்சியாளர் கார்லோ அன்செ லோட்டி ஆட்ட உத்தியை முற்றிலும் மாற்றியமைத்தார். சில வீரர்களை பெஞ்சில் அமர வைத்து, இளம் வீரர் களை களமிறக்கினார். இதன்பலனாக பிரேசில் அணிக்கு, 56ஆவது நிமிடத்தில் கோல் கிடைத்தது. பிரேசில் நட்சத்திர வீரர் காஸ்மிரோ இந்த கோலை அடித்தார். 90ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் மேற் கொண்டு கோலடிக்கவில்லை. இத னால் இந்த ஆட்டம் கூடுதல் நிமிடம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப் பட்டது. மாற்று ஆட்டக்காரரின் அற்புதம் ஆனால் ‘90+6’ நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த பிரேசில் கேப்ரியல் மார்டினெல்லி (66’ நிமிடத்தில் களமிறங்கினார்), புருனோ குய்மரேஸ் கொடுத்த துல்லிய மான நகர்த்தலை பயன்படுத்தி கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் பிரேசில் திரீல் வெற்றி யுடன் நாக் அவுட்-16 பிரிவுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி ஜூலை 5 அன்று நியூ யார்க்கில் (அமெரிக்கா) நடைபெற வுள்ள நாக் அவுட் - 16 சுற்றில் நார்வே அல்லது ஐவரி கோஸ்ட் ஆகிய அணிகளில் ஒன்றை எதிர்கொள்ள உள்ளது. 12 வருட மோசமான வேதனையை முறியடித்த பிரேசில் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் கோலை விட்டுக்கொடுத்த பிறகு பிரேசில் அணி போட்டியில் வெற்றி பெறுவது 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக, முதல் கோலை எதிரணிக்கு கொடுத்த கடந்த 5 உலகக்கோப்பை போட்டிகளிலும் பிரேசில் வென்றதில்லை என்ற மோச மான சாதனைக்கு இப்போட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள் ளது. அதாவது 12 வருட மோசமான வேதனையை முறியடித்துக் கொண்டது. ஜப்பானின் தொடரும் நாக் அவுட் சோகம் உலகக்கோப்பையின் நாக் அவுட் சுற்றைத் தாண்ட முடியாமல் தவிக்கும் ஜப்பான் அணியின் சோகம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஜப்பான் சந்திக்கும் 5ஆவது தோல்வி இதுவாகும். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த 5 தோல்விகளில் 4 தோல்விகள் கடைசி நிமிட கோல்களாலோ அல்லது பெனால்டி ஷூட் அவுட் முறையிலோ நிகழ்ந்தவை ஆகும்.

அன்செலோட்டியின் பயமில்லா உத்தி

பிரேசில் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி இரண்டாவது பாதியில் கொண்டு வந்த மாற்று உத்திகளும், மார்டினெல்லி மற்றும் எண்ட்ரிக் போன்ற இளம் வீரர்களை வியூக பாடத்துடன் களமிறக்கியது, பிரேசிலின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அன்செலோட்டியின் இந்த பயமில்லா முடிவுகள் தான் ஆட்டத்தின் இறுதிநிமிட கோலுக்கும் வழிவகுத்தது. அன்செலோட்டி இரண்டாம் பாதியில் களமிறக்கிய மார்டினெல்லி தான் வெற்றிக்கோலை அடித்தார். குறிப்பாக இந்த ஆட்டத்தில் நெய்மரை அன்செலோட்டி களமிறக்கவில்லை. எனினும் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றிருந்தால் நெய்மாரைக் களமிறக்க அன்செலோட்டி திட்டமிட்டிருந்தார் என செய்திகள் வெளியாகி இருந்தன.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் - புதன், வியாழன்

இங்கிலாந்து - காங்கோ நேரம் : இரவு 9.30 மணி இடம்: அட்லாண்டா, அமெரிக்கா

பெல்ஜியம் - செனகல் நேரம் : அதிகாலை 1.30 மணி இடம் : சியாட்டில், அமெரிக்கா

அமெரிக்கா - போஸ்னியா நேரம் : காலை 5.30 மணி இடம் : சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

செவ்வாயன்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் 4ஆவது ஆட்டத்தில் மொராக்கோ அணி 1-1 (3-2) என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வெளியேற்றியது.

கால்பந்து உலகில் அதிர்ச்சி 4 முறை சாம்பியனான ஜெர்மனியை வெளியேற்றிய பராகுவே

இந்திய நேரப்படி செவ்வா யன்று அதிகாலை நடை பெற்ற 3ஆவது ‘நாக் அவுட் - 32’ சுற்று ஆட்டத்தில் (பாஸ்டன் - அமெரிக்கா) 4 முறை சாம்பியனான ஜெர்மனி - தென் அமெரிக்க நாடான பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்க நிமிடம் முதலே ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், கோல் அடிக்கும் வாய்ப்புகளில் அந்த அணி சொதப்பியது. கோலடிக்க சாதக சூழலுக்காக காத்துக் கொண்டிருந்த பராகுவே ஆட்டத்தின் 42ஆவது நிமி டத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது. பராகுவே வீரர் ஜூலியோ என்சிசோ இந்த கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து நடை பெற்ற இரண்டாம் பாதியின் 54ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் ஹாவெர்ட்ஸ் கோலடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். வழக்கமான ஆட்டநேர முடி வில் இரு அணிகளும் 1-1 என சமநிலை யில் இருந்ததால், ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு (30 நிமிடம்) சென்றது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் (15 நிமிடம்) ஜெர்மனியின் ஜொனாதன் அடித்த கோல், நடுவரால் ‘வார்’ பரிசீலனைக்குப் பிறகு சர்ச்சைக்குரிய வகையில் மறுக்கப்பட்டது. இதனால் கூடுதல் நேர முடிவிலும் ஆட்டம் சமநிலையில் நீடித்தது. வரலாற்று பெனால்டி ஷூட்-அவுட் வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப் பிடிக்கப்பட்டது. உலகக்கோப்பை வரலாற்றில் இதற்கு முன்பு விளை யாடிய 4 பெனால்டி ஷூட்-அவுட்களி லும் ஜெர்மனியே வெற்றி பெற்றி ருந்தது. ஆனால், இந்த முறை பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஜெர்மனியின் 2 வாய்ப்புகளைத் தடுத்தார். இறுதியில் 4-3 என்ற கணக்கில் பராகுவே அணி வரலாற்று வெற்றியுடன் நாக் அவுட் - 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது. பராகுவேயில் பொது விடுமுறை 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு உல கக்கோப்பை நாக்-அவுட் வரலாற்றில் தற்போதைய தரவரிசைப் படி நிகழ்ந்த 4ஆவது மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியாக ஜெர்மனியின் தோல்வி கருதப்படுகிறது. 2014இல் உலகக் கோப்பையை வென்ற தற்குப் பிறகு, ஜெர்மனி அணி உல கக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இத்தகைய சூழலில், ஜெர்மனியை நாக் அவுட் சுற்றுப் போட்டியில் வீழ்த்தியதால் பராகுவே அரசு அந்நாட்டில் பொது விடுமுறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

லீக் சுற்றின் சுவாரஸ்யங்கள் - சாதனைகள் (தொடர்ச்சி)

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொட ரின் லீக் சுற்று முடிவில் மொத்தம் 1,774 கோல் முயற்சிகள் (Shots) மேற்கொள்ளப்பட்டன. இதில் பெல்ஜியம் அதிகபட்சமாக 73 கோல் முயற்சிகளைச் செய்தது. அதே போல இந்த உலகக்கோப்பையில் பங்கேற்ற 48 அணிகளில் 47 அணி கள் கோல் அடித்துள்ளன. பனாமா மட்டுமே ஒரு கோல் கூட அடிக்க வில்லை. இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை அடிக்கப்பட்ட மொத்த கோல்களின் எண்ணிக்கை 2,935-ஐ (நாக் அவுட் சேர்க்கவில்லை) எட்டியுள்ளது. கனடா • கத்தாருக்கு எதிரான போட்டியில் கனடா 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றில் வடஅமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த ஒரு அணி 4 கோல்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல்முறையாகும். • குராசோ அணியின் தலைமை பயிற்சி யாளர் டிக் அட்விகாட், தனது 78 வயது 271 நாட்களில் அணியை வழிநடத்தி, உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக வயதான பயிற்சியாளர் என்ற சாதனையைப் படைத்தார். • மொரோக்கோவின் இஸ்மாயில் சைபாரி உலகக்கோப்பையின் தொடர்ச்சியான 3 போட்டிகளில் கோலடித்த முதல் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதே போல உலகக்கோப்பை போட்டி ஒன்றில் 5 கோல்களை அடித்த முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை செனகல் அணி படைத்தது. • இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற 1,248 வீரர்களில், 354 பேர் ஏற்கெனவே உலகக்கோப்பையில் விளையாடியவர்கள். 894 வீரர்கள் முதன்முறையாக களமிறங்கி யுள்ளனர். 1,248 வீரர்களில் 999 பேர் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடினர். இதில் 687 பேர் மாற்று வீரர்களாக களம் புகுந்தனர். அணிகள் சராசரியாக ஒரு போட்டிக்கு 4.77 வீரர்களை மாற்றாகப் பயன்படுத்தின. ஈராக், மெக்சிகோ மற்றும் நார்வே ஆகிய மூன்று அணிகள் தங்களின் ஸ்குவாடில் இருந்த 25 வீரர்களைப் போட்டிகளில் பயன்படுத்தி, தங்களது முழு அணியையும் களமிறக்கின. • குரூப் சுற்றில் மொத்தம் 68,162 பாஸ்கள் செய்யப்பட்டன (போட்டிக்கு சராசரியாக 946.7). ஸ்பெயின் அணி அதிகப்பட்சமாக 2,191 பாஸ்களைச் செய்தது, அதில் 2,013 வெற்றிகரமானவை. மொத்தம் 2,359 வெற்றிகரமான கிராஸ்கள் செய்யப்பட்டன. இதில் கனடா அணி 117 கிராஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.