தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை பிரேசிலில் வேலை நேரம் வாரத்திற்கு 40 மணி நேரமாக குறைப்பு!

30 May 2026, 8:35 pm
2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை  பிரேசிலில் வேலை நேரம் வாரத்திற்கு 40 மணி நேரமாக குறைப்பு!

2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை பிரேசிலில் வேலை நேரம் வாரத்திற்கு 40 மணி நேரமாக குறைப்பு!

லூலா தலைமையிலான தொழிலாளர் கட்சி நடவடிக்கை பிரேசிலியா, மே 30- பிரேசில் தொழிலாளர்களுக்கு இனி வாரம் 40 மணி நேரம் மட் டுமே வேலை என்றும், 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப் படுவதாகவும், லூலா தலைமையி லான தொழிலாளர் கட்சி அரசு அறி வித்துள்ளது. இதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மே 27 அன்று பிரேசில் நாடாளுமன்ற மக்களவை நிறைவேற்றியுள்ளது. முதலாளிகளின் அதீத லாப வெறி, தொழிலாளர்களை ஓய்வே இல்லாமல் சுரண்டி வரும் நிலை யில், தொழிலாளர்களின் உடல், மன நலனைக் கருத்தில் கொண்டு, அவர் கள் குடும்பத்துடனும் தங்களது சொந்த நலனுக்காகவும் நேரம் செலவிட வேண்டும் என்ற வகையில் வேலை நேரத்தை குறைக்க வேண் டும்; அதே நேரத்தில் அவர்களின் ஊதியம் வெட்டப்படக்கூடாது என் பது உலகம் முழுவதும் உள்ள தொழி லாளர் மற்றும் தொழிற்சங்கங்க ளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உருவாக் கப்பட்ட பிரேசிலின் அரசியல மைப்பு திருத்த முன்மொழிவு இப் போது மேலவையான செனட்டில் விவாதத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமோக ஆதரவு

இது சாதாரண சட்டம் அல்ல. அரசியலமைப்பை திருத்துவதற் கான முன்மொழிவு என்பதால் இரண்டு முறை வாக்கெடுப்பு கட்டா யம் என்பது அந்நாட்டில் ஒரு விதி யாக உள்ளது. முதல் சுற்றில் இந்த திருத்தத்திற்கு 472 பேர் ஆதர வாகவும், 22 பேர் எதிராகவும் வாக்க ளித்தனர். இரண்டாம் சுற்றில் 461 பேர் ஆதரவாகவும் 19 பேர் எதிராக வும் வாக்களித்தனர். இரு சுற்றிலும் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் மக்களவையில் இந்த முன் மொழிவு நிறைவேறியது. தொழி லாளர் நலனுக்கான இந்தப் போராட் டம் எத்தனை வலுவானது என்பதை இந்த எண்ணிக்கைகளே உணர்த்து கின்றன.

14 மாதங்களில் படிப்படியாக நடைமுறைக்கு வரும்

இந்த மாற்றம் ஒரே நாளில் அம லாகாது எனவும் படிப்படியாக நடை முறைக்கு வரும் எனவும் கூறப்படு கிறது. அதாவது திருத்தம் நிறை வேறிய 2 மாதங்களுக்குள் வாரம் இரு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்கள் கட்டாயமா கும். அவற்றில் ஒரு நாள் முன்னு ரிமையாக ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும். அதே நேரத்தில் வார வேலை நேரம் 44 மணி நேரத்திலி ருந்து 42 மணி நேரமாக குறையும். 14 மாதங்களுக்குள் முழுமையாக 40 மணி நேரமாக குறைக்கப்படும் என கூறப்படுகிறது.

ஊதியம் குறையாது என்பதில் உறுதி

முதலாளிகள் வேலை நேரம் குறைகிறது என்று சொல்லி ஊதி யத்தை வெட்டுவார்களோ என்ற அச்சம் தேவையில்லை. வேலை நேரம் குறைந்தாலும் ஊதியம் ஒரு பைசா கூட குறைக்கக்கூடாது என்று இந்தத் திருத்தம் தெளிவாகக் கூறு கிறது.

விதிவிலக்குகள்

உயர்கல்வி பெற்று சமூகப் பாது காப்பு வரம்பைவிட 2.5 மடங்கு அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக் கும், அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோருக் கும் விதிவிலக்கு உண்டு. மருத்து வமனை, காவல்துறை, போக்கு வரத்து, துப்புரவுப் பணி போன்ற மக்களுக்கு சேவை செய்யும் அத்தி யாவசியத் துறைகளில் வேலை செய்வோர் தொழிற்சங்கத்தின் தலைமையிலான பேச்சுவார்த்தை மூலம் பெற்ற உரிமைகளை தொட ரலாம். சிறு வணிகர்கள் மற்றும் தனி நுண்தொழில் முனைவோருக்கு (MEIs) தனியான விதிகள் வரும் நாட்களில் வகுக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நிறைவேறிய இந்தத் திருத்தம் இப்போது செனட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. செனட்டிலும் நிறைவேறினால் மட்டுமே இது அரசியலமைப்பு சட்டமாக நடைமுறைக்கு வரும். அதேபோல தற்போது நிறை வேற்றப்பட்டுள்ள இந்த புதிய விதி களுக்கு முரணாக கடந்த கால தொழிற்சங்க ஒப்பந்தங்களில் இருக்கும் அனைத்து விதிகளும் இத்திருத்தம் நிறைவேறிய 2 மாதங்களுக்குள் தானாகவே செல் லாதது ஆகிவிடும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.