பிரேசில் ஜனாதிபதித் தேர்தல் அக்டோபர் 25 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
5 Oct 2026, 8:47 pm

பிரேசில் ஜனாதிபதித் தேர்தல் அக்டோபர் 25 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

பிரேசிலியா,அக்.5-பிரேசில் ஜனாதிபதி தேர்தல் அக்.4 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி லூலா மற்றும் தாராளவாதக் கட்சியின் வேட்பாளரான ஃபிளாவியோ போல்சனாரோ ஆகிய இருவரும் வெற்றிபெறத் தேவையான (50 சதவீதத்துக்கும் அதிகமான) வாக்குகளை பெறவில்லை. இதன் காரணமாக அக்.25 அன்று இரண்டாம் கட்டவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், செல்லுபடியாகும் வாக்குகளில் தீவிரவலதுசாரி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சனாரோ சுமார் 47 சதவீதமும், லூலா 44.9 சதவீதமும் பெற்றுள்ளனர்.

பிரேசிலுக்கு துரோகம் செய்பவர்கள்

துவக்கத்தில் இருந்தே முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவின் தாராளவாதக் கட்சிக்கும், தற்போதைய ஜனாதிபதி லூலாவின் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2022 தேர்தலில் லூலா வெற்றி பெற்ற நிலையில் அவரது ஆட்சியை அமெரிக்காவின் ஆதரவுடன் போல்சனாரோ கவிழ்க்க முயற்சி செய்தார். இவ்வழக்கில் அவர் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது மூத்த மகன் ஃபிளாவியோ போல்சனாரோ இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துடன் மிக நெருக்கமாக இருப்பதுடன் பிரேசில் மீதுஅமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என தனதுசொந்த நாட்டுக்கும், மக்களுக்கும் எதிராக போரைதூண்டிய நபராவார். மேலும் லூலா தலைமையிலான இடதுசாரி ஆட்சியை கவிழ்த்து விட்டு அமெரிக்காவுக்கு ஆதரவான அரசை அமைக்க வேண்டும்;பிரேசிலின் வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வகையில் திறந்து விட வேண்டும்; என்பதேஇவர்களின் நோக்கமாக உள்ளது என கடும் விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பலமான பகுதிகளே வெற்றியை தீர்மானிக்கும்இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பெரும்பாலானவை அந்நாட்டின் தெற்குப் பகுதியில் பதிவானவை ஆகும். இப்பகுதி வரலாற்று ரீதியாக வலதுசாரிகட்சிகள் பலமான பகுதியாகும். தொழிலாளர் கட்சியின் கோட்டையாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் போது தேர்தல்முடிவுகள் லூலாவுக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் சுற்றில் தாராளவாதக் கட்சியின் போல்சனாரோ தான் முன்னிலையில் இருந்தார். அப்போதும் அவருக்கு அந்நாட்டின் தெற்குப் பகுதியில் தான் அதிக வாக்குகள்கிடைத்தன. ஏறத்தாழ 70 சதவிகிதவாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே லூலா முதல் இடத்தைப் பிடித்தார்.

அத்தேர்தலில் போல்சனாரோ சுமார் ஆறு புள்ளிகள் வரை முன்னிலையில் இருந்தார். பின்னர் லூலா அந்த முதல் சுற்றை சுமார் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில்வென்றார். ஆனால் இந்த முறை போல்சனாரோ மகன் முன்னிலைப் பெற்றுள்ளார். இந்நிலையில் வடகிழக்குமாகாணங்களில் அதிகவாக்குகள் பெற்றால் மட்டுமே லூலா வெற்றியை தக்க வைக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 15.8 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் சுமார் 3.3 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. தற்போது, இரு தரப்பினருக்கும் மற்றவேட்பாளர்களை ஆதரித்தவர்களின் வாக்குகளைப்பெறவும், முதல் சுற்றில் பங்கேற்காத வாக்காளர்களின் ஒரு பகுதி வாக்கைத் திரட்டவும் மூன்று வார காலம் அவகாசம் உள்ளது. இக்காலகட்டத்தில் தீவிரபிரச்சாரம் மேற்கொள்ள இருகட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

சிலி,அர்ஜெண்டினா,பெரு, கொலம்பியா, பொலிவியா என தென்னமெரிக்க நாடுகளில் வலதுசாரிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், அப்பிராந்தியத்தில் மிகப்பெரிய நாடாகவும் இடதுசாரிகள் தலைமையிலும் உள்ள பிரேசிலில்வலதுசாரிகளின் முன்னிலை ஒரு அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் வலதுசாரிகள் வெற்றி பெற்றால் அது தென்னமெரிக்க பிராந்தியம் முழுவதும்அமெரிக்காவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். பிரேசில் தேர்தலின் வெற்றி தோல்வியில் தான்அந்நாட்டின் எதிர்காலம், பொருளாதார கொள்கைகள், லத்தின் அமெரிக்காவில் அமெரிக்காவின் ஆதிக்கம், சர்வதேச அரசியலில் குறைந்தபட்ச சமநிலைஉள்ளிட்டவை அடங்கி இருக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.