அமெரிக்கா கடற்கொள்ளையனாக மாறக் கூடாது - பிரேசில் ஜனாதிபதி லூலா
14 Jul 2026, 6:27 pm

அமெரிக்கா, கடற்கொள்ளையனாக மாறக் கூடாது என்று பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா விமர்சித்துள்ளார்.

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதுடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது 20 சதவீதக் கட்டணத்தை விதிக்கப்போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த நீரிணைப் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கான ஈட்டுத்தொகையாகவே இந்தக் கட்டணம் விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா கடற்கொள்ளையனாக மாறக் கூடாது என்று பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

"ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் அனைத்து கப்பல்களும், எண்ணெய் நிறுவன உரிமையாளர்களும் 20% கட்டணம் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். முன்பு இதைதான் 'கடற்கொள்ளை' என அழைப்பார்கள். நீண்ட காலமாக கடற்கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்ததாக கருதப்படும் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு, இப்போது தானே கடற்கொள்ளையனாக மாறக் கூடாது" என அவர் தெரிவித்துள்ளார்.