தீக்கதிர் உலக செய்திகள்
3 Aug 2026, 8:42 pm

பிரேசில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக லூலா தேர்வு

பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி லூலா நான்காவது முறை போட்டியிடுவதாக தொழி

லாளர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய மாநாட்டில் லூலாவை ஜனாதிபதி வேட்பாளராகவும் தற்போது துணைஜனாதிபதியாக உள்ளபிரேசில் சோசலிஸ்ட் கட்சியின் ஜெரால்டோ அல்க்மின் மீண்டும் துணை ஜனாதிபதி வேட்பாளராகப்போட்டியிடுவதை பிரதிநிதிகள் உறுதிப்படுத்தினர். மேலும் அவர்களது வேட்பு மனுவும் தாக்கல்செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் பிரச்சனையே

ஜெலென்ஸ்கி தான்உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டார் என அவரது முன்னாள்செய்தித் தொடர்பாளர் யூலியா குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவுடனான போரில் அதிகம் பயன் பெரும் நபராகவும் அவர்மாறிவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார். போரைகாரணமாக்கி தேர்தல்களை ரத்து செய்வதன்மூலம் அவர் அதிகாரத்தை பிடித்து வைத்துக்கொண்டுள்ளார். தனது ஆதரவாளர்கள் செய்யும் அதிகஊழல்களை அவர் கண்டும் காணாமல் இருக்கிறார். ஜெலென்சி ஊழலுக்கு உடந்தையாக உள்ளார். சர்வாதிகாரப் போக்கை முன்னெடுக்கிறார். தனது அரசியல் பிழைப்புக்காகப் போரை தொடர்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்பெயின் சென்ற ஆயிரக்கணக்கான அகதிகள் மொராக்கோவின் சூழ்ச்சிகளே காரணம் : ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

மாட்ரிட்,ஆக.3-ஜூலை 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் செயுடா பகுதிக்கு 60ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் கடல் வழியாக நீந்தி சென்றனர். இதற்கு காரணம் புவிசார் அரசியல் சூழ்ச்சிகளே என்று ஸ்பெயின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி (PCTE) குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இவ்வாறு நாட்டுக்குள் வரும்அகதிகளை அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதையும், அதைப் பயன்படுத்திஇனவெறியைத் தூண்டும் வலதுசாரி சக்திகளின் முயற்சிகளையும் அக்கட்சி தனது அறிக்கையில் வன்மையாகக் கண்டித்துள்ளது.செயுடா என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது ஐரோப்பிய நாடான ஸ்பெயினின்கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்த பகுதி மொராக்கோ நாட்டையொட்டியே அமைந்துள்ளது. எனவே,மொராக்கோவிலிருந்து தரை வழியாகவோ அல்லது கடல்வழியாகவோ மிக எளிதாக இந்த எல்லைக்குள் நுழைந்துவிட முடியும்.ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியைத் தன் வசப்படுத்த வேண்டும் என்பது மொராக்கோவின்நீண்டகால திட்டமாக உள்ளது என ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும்இரு நாடுகளுக்கும் இடையே சில மோதல்களும் உண்டு.இந்தச் சூழலில் தான் மொராக்கோ அரசாங்கம் தனது நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையின் சோதனைகளைக் கண்டும்காணாமல் இருந்து, ஒரே இரவில் சிறுவர்கள் உட்பட சுமார் 60,000 க்கும் மேற்பட்ட மக்களை செயுடா எல்லைக்குள் செல்ல மறைமுகமாக உதவி செய்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது தன் நாட்டுடன் முரண்படும் ஸ்பெயின் அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி கொடுக்க அகதிகளை ஒருஅரசியல் ஆயுதமாக மொராக்கோ அரசு பயன்படுத்தியுள்ளது என்பதே குற்றச்சாட்டுகள்.சமீபகாலமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுடன் மொராக்கோ தனது ராணுவம் மற்றும் வணிக உறவுகளை அதிகரித்து வருகிறது.

மறுபுறம், மொராக்கோவின் அண்டை நாடான அல்ஜீரியாவுக்கும், ஸ்பெயினுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் சமீப நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகையபின்னணியில் தான் இந்த அகதிகள் வருகை நடந்துள்ளது என ஸ்பெயின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சிக்கலில் ஸ்பெயினில் ஆட்சியில் உள்ள கூட்டணி அரசு எல்லையில் இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவு நடக்கக் காரணமான தனது சொந்த வெளியுறவுக் கொள்கைகளையோ, மொராக்கோவுடன் தனக்குள்ள முரண்பாடுகளையோ வெளிப்படையாகப் பேச மறுத்து வருகிறது.அதுமட்டுமின்றி எல்லாவற்றுக்கும் காரணம் “மனிதக் கடத்தல்கும்பல்கள் தான்” என்று ஒட்டு மொத்த பிரச்சனைகளையும் திசைதிருப்பி உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.இந்நிலையில் தனது அறிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களை யாரும் பலிகடா ஆக்கக் கூடாது.

உள்நாட்டுத்தொழிலாளர்களையும் வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளர்களையும் ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்பும்முயற்சிகளை முறியடித்து, பொதுவான நலனுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் எனஸ்பெயின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஸ்பெயினில் உள்ள உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும்மூலக்காரணம் முதலாளித்துவமும், அதனை நிர்வகிக்கும் அரசாங்கங்களுமே ஆகும்.

எல்லைகளில் ராணுவ குவிப்பு, ஒடுக்குமுறை, சட்டப்பூர்வ உத்தரவு இன்றி மக்களைத்திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியை ஒரு பெரிய சுடுகாடாக மாற்றும்எல்லைகளின் தீவிர ராணுவமயமாக்கல் ஆகியவை கைவிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.அவற்றோடு மொராக்கோ அரசு அகதிகளை அரசியல் அழுத்தத்திற்கான கருவியாகப் பயன்படுத்துவதையும், அதற்குத் துணைபோகும் ஸ்பெயின் அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, ராணுவக் கொள்கைகளையும்வன்மையாகக் கண்டித்துள்ளது.