காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பிரேசில் மாநாடு பாரிஸ் இலக்கை நோக்கிய அழுத்தம்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பிரேசில் மாநாடு பாரிஸ் இலக்கை நோக்கிய அழுத்தம்</strong></p>
<p>தென் அமெரிக்க நாடான பிரேசி லின் அமேசான் பிராந்தியத்தில் உள்ள பெலெம் நகரில், ஐ.நா.வின் 30-வது காலநிலை குறித்த சர்வதேச மாநாடு (COP 30) நவம்பர் 6-ல் தொடங்கியது. பருவநிலை மாற்றங்களை விவாதிப்பதற்காக ஐ.நா. சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 50 சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்றனர். பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகை யில், பாரிஸ் உடன்பாட்டில் கையெழுத்திட்ட 195 நாடுகளும், காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தவறி விட்டன எனக் குற்றம் சாட்டினார். புவி வெப்ப மயமாதலைத் தடுத்து நிறுத்த, எரிசக்தி மாற்றமும் இயற்கையைப் பாதுகாப்பதும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், 2026-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருட் களின் பயன்பாட்டை நிறுத்துவதன் மூலம் உலக வெப்ப உயர்வை 2.5° சி அளவில் கட்டுப் படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார். மாநாட்டின் முதல் நாள் நிறைவுப் பேச்சாளராகக் கலந்துகொண்ட பிரேசிலின் முன்னாள் அதிபரும், பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியின் என்டிபி தலைவரு மான தில்மா ரூசெப், புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு NDB நிதி உதவி செய்யத் தயாராக உள்ளது என்றார். ஐஎம்எப், உலக வங்கிக்குப் மாற்றாக செயல்படும் இந்த வங்கி, வட்டாரக் கரன்சிகளில் பன்முகக் கூட்டாளியாக உதவுவதாகவும், இதுவரை சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பில் 120 திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோ னியோ குட்டரஸ் மற்றும் போப் ஆண்டவர் ஆகியோரும் புவி வெப்பமயமாதலால் ஏற்படப் போகும் நாசகர விளைவுகள் குறித்து எச்சரித்து, இயற்கையைப் பாது காக்க அதிக முதலீடுகள் தேவை என வலியுறுத்தினர்.</p>
