தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

23 Jan 2026, 5:49 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்

தருமபுரி, ஜன.23- தருமபுரி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் வியாழனன்று தானம் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், உத்தனப் பள்ளி அருகேயுள்ள கண்ணசந்திரம் பகுதியை சேர்ந்த வர் முருகேசன் (50). இவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகக்கூறி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலை யில், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜன.18 ஆம்  தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழனன்று அவ ருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, அவ ரது இரு சிறுநீரகங்கள் மற்றும் இதயம் ஆகியவை தானம் செய்யப்பட்டன. பின்னர், முருகேசனின் உட லுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், ஜன.23- திருச்செங்கோட்டில் சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி பகுதியிலிருந்து, தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளி யன்று நடைபெற்றது. இப்பேரணிக்கு நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் நடராஜன் தலைமை வகித் தார். வட்டார போக்குவரத்து அலுவலர் உமா மகேஸ் வரி முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, சங்ககிரி சாலை வழியாக வந்த பேரணி மீண் டும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

சேலம், ஜன.23- தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது அவர்  பேசுகையில், இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்த லின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணை யம் உருவான ஜன.25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தின மாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் வெள்ளியன்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சேலம் அரசு கலைக்கல்லூரி யில் விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம், 2026 ஆம் ஆண்டின் கருப் பொருளாக “எனது இந்தியா எனது வாக்கு இந்திய ஜனநாய கத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்” என வெளியிட்டுள் ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவருக்கும், வாக்க ளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக, சேலம் அரசு  கலைக்கல்லூரி மாணவர்களால் வரையப்பட்ட தேசிய வாக் காளர் தின இலட்சினையினை ஆட்சியர் பார்வையிட்டு, புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், வருவாய் அலுவலர் ரா.ரவிக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) விவேக் யாதவ், உதவி ஆணை யர் லட்சுமி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொ) ஐ. பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு இடையூறு மதுபானக் கடையை அகற்ற கோரிக்கை

உதகை, ஜன.23- தேவர்சோலை பகுதியில் பள்ளி மாணவர்கள், பெண் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடை யூறாக செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேவர்சோலை பகுதியில் குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் விவசாய நிலங்களை ஒட்டி, அரசு மதுபானக் கடை செயல்பட்டு வரு கிறது. இந்த மதுக்கடைக்கு நாள்தோறும் வருவோர், மதுவை  வாங்கி கடை முன்பு திறந்தவெளி பகுதியில் அருந்திவிட்டு, காலி பாட்டில்களை விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வீசி செல்கின்றனர். மேலும், மாலை நேரங்களில் மதுபானங்களை வாங்கிச் செல்ல வருவோர், நெடுஞ்சாலை யின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி செல்வதால், பள்ளி  முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் மற்றும் பெண் தோட்டத் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், சாலையின் இருபுறமும் நிறுத்தப் படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு  வரும் அரசு மதுபானக் கடையை அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கேமரா பொருத்த உத்தரவு

கோவை, ஜன.23- கோவை வடக்கு மண்டலத்தில் சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த ஆணையாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் வியாழ னன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, வடக்கு மண்டலம் வார்டு எண் 18-க்குட்பட்ட சங்கனூர் பிரதான சாலை மற்றும் புதுத்தோட்டம் பகுதிகளில் சாலையோரங்க ளில் குப்பை கொட்டப்படுவதைக் கண்டறிந்த ஆணையா ளர், அதனைத் தடுக்க அந்த இடங்களில் கண்காணிப்பு கேம ராக்கள் (CCTV) பொருத்தவும், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

9 இடங்களில் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்

ஈரோடு, ஜன.23- ஈரோடு மாவட்டத்தில் 9 இடங்களில் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் பிப்.6 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு,  2027 – 30 ஆம் வருடத்திற்குள் தொழுநோய் பர வலை முற்றிலும் ஒழித்திட பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 2024 – 25  ஆம் ஆண்டில் முதல் நிலை ஊனத்துடன் புதிய நோயாளிகள் மற்றும் குழந்தை நோயா ளிகள் சத்தியமங்கலம் நகர்ப்பகுதி, ஜம்பை,  குருவரெட்டியூர், சிறுவலூர், திங்களூர், சென்னிமலை, சிவகிரி, புளியம்பட்டி, சித் தோடு ஆகிய 8 வட்டாரங்களிலும் நேரடி  தொழுநோய் கண்டுப்பிடிப்பு முகாம் பிப்.6  ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப் பணியில் 986 முன் களப்பணியாளர்களும், 97  மேற்பார்வையாளர்களும் ஈடுபடவுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று தொழு நோய்க்கான பரிசோதனை செய்யவுள்ள தாக மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரி வித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு

உதகை, ஜன.23- பந்தலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து திரி சூலம் வைத்ததை வருவாய்த் துறையினர் அகற்றினர். நீலகிரி மாவட்டம், பந்த லூர் அருகே பொன்னானி யில் அரசு நிலத்தை ஆக்கிர மித்து சிலர் திரிசூலம் வைத் துள்ளனர். அரசு நிலத்தில் வைக்கப்பட்ட திரிசூலத்தை அகற்ற கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட் டார். அதன்படி, பந்தலூர் தனி வட்டாட்சியர் செந்தில்கு மார், தலைமையில் துணை வட்டாட்சியர் பொன்னரசு, வருவாய் ஆய்வாளர் சிவ குமார், கிராம நிர்வாக அலு வலர் மாரிமுத்து, வருவாய்த் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று திரிசூலத்தை போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால் அப்ப குதியில் சிறிதுநேரம் பர பரப்பு ஏற்பட்டது.

3 மாதங்களில் 109 முறை மனித - விலங்கு மோதல் தடுப்பு

உதகை, ஜன.23- கூடலூர் நாடுகாணி தாவர மரபி யல் பூங்காவில் உள்ள கட்டளை கட்டுப் பாட்டு மையம் மூலம், கடந்த 3 மாதங் களில் 109 முறை மனித – விலங்கு மோதல் தடுக்கப்பட்டுள்ளதென, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திலுள்ள கூடலூர், ஓவேலி, நாடுகாணி, பந்தலூர், சேரம்பாடி, பிதர் காடு வனச்சரகங்களுக்குட்பட்ட வனப் பகுதிகளிலிருந்து அடிக்கடி குடியிருப்பு கள், விவசாய, நிலங்கள் மற்றும் ஊருக் குள் வரும் யானைகள் விவசாய பயிர் களை சேதப்படுத்தி வருவதோடு, விவ சாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிர், உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன. இப்பகுதியில் ஆண்டுக்கு குறைந்தது 7 – 12 வரை மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி வந் துள்ளன. யானைகளால் மனித உயிர் கள் பலியாகுவதை தடுக்கும் வகை யில் வனத்துறை சார்பில், 50க்கும் மேற் பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேம ராக்கள் மூலம் பெறப்படும் தகவல் களை ஒருங்கிணைத்து யானைகள் நட மாட்டம் உள்ள பகுதிகளில் பணிபுரி யும் வனத்துறையினர் மற்றும் அப் பகுதி மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வந்தனர். இந்நிலை யில் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில், நாடுகாணி வனச் சரகத்துக்குட்பட்ட ‘ஜீன்பூல் மரபியல்’ தோட்டத்தில், உயர்தர தொழில்நுட்பத் துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப் பாட்டு மையம் புதிதாக அமைக்கப்பட் டது. இந்த கட்டுப்பாட்டு மையம் கடந்த டிசம்பர் 20ம் தேதி முதல் செயல்பாட் டிற்கு வந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் சோதனைக்காக துவக்கப்பட்ட இந்த கட்டளை கட்டுப்பாட்டு மையத்திலி ருந்து நவம்பர் மாதத்தில் 28 எச்சரிக் கைகளும், டிசம்பர் மாதத்தில் 53 எச்ச ரிக்கைகளும், ஜனவரி மாதத்தில் இது வரை 28 எச்சரிக்கைகளும் குறுஞ் செய்தி வழியாக அனுப்பப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கிடைக்கும் எச்சரிக்கைகள் மூலம் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக ளில் உள்ள மக்கள் விழிப்படைந்து தங் களை முன்கூட்டியே பாதுகாத்து கொள் ளும் சம்பவங்களும் நடைபெற்று உள் ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவ லர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், மனித - விலங்கு மோதல்களை கண்கா ணிக்கவும், கட்டுப்படுத்தவும் வனத் துறை முன்கள பணியாளர்களுடன் யானை விரட்டும் காவலர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் அதி விரைவுக்குழு காவலர்கள் என மொத் தம் 120 தற்காலிக காவலர்கள் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர். ஜீன்பூல் மரபி யல் தோட்டத்தில் உயர்தர தொழில் நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும்  கட்டுப்பாட்டு மையம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது. இதில் 34 பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட் பத்துடன் 12 இடங்களில் 46 கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. மனித-வன விலங்கு மோதல்கள் மற்றும் வனப்பாது காப்பு தொடர்பாக தகவல் அளிக்க ஏது வாக இத்திட்டத்தின் கீழ் தற்போது கட்ட ணமில்லா தொலைபேசி உதவி எண்  (1800-425-4353) அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது, என்றார்.

புத்தகத் திருவிழாவில் நாளை அச்சோவியம் வரைதல் போட்டி

திருப்பூர், ஜன.23 – 22ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2026 இல் ஞாயிறன்று  மழலையர் வகுப்புகள் முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு அச்சோவியம் வரைதல் போட்டி  நடைபெறுகிறது. திருப்பூர் புத்தகத் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதில் மாணவ, மாணவியருக்கு திறனாய்வு  போட்டிகள் ஞாயிறன்று காலை 11 மணிக்கு நடத்தப்படு கின்றன. மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு  வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். கை அச்சு அல்லது கை ரேகை அச்சு வைத்து ஓவியம் வரைய லாம். வெண்டைக்காய், எலுமிச்சை, வெங்காயம் உள்ளிட்ட  காய்கறிகள், பழங்கள் மற்றும் இலைகள் மூலமும் அச்சு வைத்து வரையலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித் துள்ளனர். அறிவியல் கண்காட்சி ஜன.26 திங்களன்று காலை 10.30 மணிக்கு, அன்றாட வாழ் வில் அறிவியல் எனும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடை பெறுகிறது. இதில் 4, 5 வகுப்புகள், 6, 7 வகுப்புகள் மற்றும் 8,  9 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் ஒரு குழுவிற்கு 2  மாணவர்கள் வீதம் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இது தவிர பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிறன்று காலை 10.30  மணிக்கு 6, 7 வகுப்புகள், 8, 9 வகுப்புகள் என இரண்டு பிரிவாக  மாணவ, மாணவிகளுக்கு தனிநபர் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

உடுமலையை மையப்படுத்தி விளையாட்டு மைதானம் கட்ட கோரிக்கை

உடுமலை, ஜன.23 - கிராமப்புற மக்கள் அதிகம் வசிக்கும் உடுமலையில்  விளையாட்டு மைதானம் கட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கிராமங்கள்  நிறைந்த உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் இளைஞர்கள்  உடற்பயிற்சி மற்றும் விளையாடுவதற்காக தனியார் உள் மைதானங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. விவ சாய தொழிலை மட்டுமே அதிகம் நம்பி இருக்கும் இப்பகுதி  மக்கள், தனியாக பணம் கொடுத்து விளையாட்டு பயிற்சிக்கு  செல்ல முடியாது. எனவே தமிழக அரசு சிறிய அளவிலான  விளையாட்டு மைதானங்கள் கட்டி, அதில் கபடி, கால்பந்து  உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி  கூடங்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் நிழற்குடை

உடுமலை, ஜன.23 - உடுமலைப்பேட்டை நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-26 ஆம் ஆண்டின் கீழ்  ரூ.25 லட்சம் மதிப்பீட்டில்  பேரறிஞர் அண்ணா கூடுதல் பேருந்து நிலையத்தில் பயணிகள்  நிழற்குடை  அமைக்க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி அடிக் கல் நாட்டினார். இதில் உடுமலை நகர கழக செயலாளர் வேலுச் சாமி,  நகர மன்ற தலைவர் மத்தின் மற்றும் நகர மன்ற உறுப்பி னர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்ட னர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசு அலுவலர்கள்

திருப்பூர், ஜன.23- திருப்பூர் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வெள்ளியன்று நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு துறை  சார்ந்த அலுவலகர்கள் பலர் வராதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கூட்டத்துக்கு வராத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பூர் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்ட அளவிலான விவசாயி கள் குறை தீர்க்கூட்டம், கோட்டாட்சியர்  சிவபிரகாஷ் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. சில விவசாயிகள்  மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்ட னர். ஆனால் விவசாயிகளின் எண்ணிக் கையை விட அதிகாரிகளின் எண் ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.  46 துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டிய இக்கூட்டத் திற்கு ஒரு சில  துறைகளைச் சேர்ந்த  அலுவலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.  குறிப்பாக வேளாண் துறையைச் சார்ந்த அலுவலர்கள் யாரும் கலந்து கொள்ளாதது விவசாயிகளிடம் அதிருப் தியை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்படும், இனி வருகின்ற  கூட்டங்களில் அனைவரும் கட்டா யம் கலந்து கொள்வதை உறுதி செய் யப்படும் என கோட்டாட்சியர் சிவபிர காஷ் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் குறைகளை கோட்டாட்சியரிடம் தெரிவித்தனர். திருப்பூர் வடக்கு மற் றும் தெற்கு தாலுகா அலுவலகங்களில்  சேவைகளுக்காக வரும் பொதுமக்களி டம் மனு எழுதி தருவதாக பணம் பறிக் கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் புதிய பேருந்து நிலையம்  பின்புறம் வடக்கு உழவர் சந்தை  வெளியே வியாபாரிகள் ஆக்கிரமித்து  வியாபாரம் செய்வதன் காரணமாக விவ சாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும். முறை யான பேருந்து வழித்தடம் இல்லாத அனுப்பர்பாளையம் உபகோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மங்கலம், வஞ்சி பாளையம் மின்வாரிய பிரிவு அலுவல கங்களை சாமளாபுரம் உபகோட்டத் தில் இணைக்க வேண்டும்  என வலி யுறுத்தப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.