மூளைச்சாவு ஏற்பட்ட வாலிபரின் உடலுறுப்புகள் தானம்
11 May 2026, 12:17 am

மூளைச்சாவு ஏற்பட்ட வாலிபரின் உடலுறுப்புகள் தானம்

கோவை, மே 10- மூளைச்சாவு ஏற்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞரின் உட லுறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கொரதோட்டம் மெள்ளகோவில்பாளையத்தை சேர்ந்த வர் கார்த்திக் குமார் (27).

இவர் கடந்த வியாழனன்று மாலை இருசக்கர வாக னத்தில் சென்றபோது, எதிர்பாராத வித மாக கீழே விழுந்து விபத்துக்குள்ளா னார்.

இதில் தலையில் பலத்த காயம டைந்த கார்த்திக் குமார், மேல் சிகிச் சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி கார்த்திக் குமா ருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத் துவர்கள் தெரிவித்தனர்.

இக்கட்டான சூழலிலும் கார்த்திக் குமாரின் குடும் பத்தினர் அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

இதை யடுத்து அறுவை சிகிச்சை மூலம் உட லுறுப்புகள் சேகரிக்கப்பட்டன.

இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறு நீரகம் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங் கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, கார்த் திக் குமாரின் உடலுக்கு மருத்துவமனை முதல்வர், இருப்பிட மருத்துவ அதி காரி, செவிலியர்கள் மற்றும் பணியா ளர்கள் ஞாயிறன்று மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.