மூளைச்சாவு: இளைஞரின் உடலுறுப்புகள் தானம்
13 May 2026, 11:06 pm
<p><strong>மூளைச்சாவு: இளைஞரின் உடலுறுப்புகள் தானம்</strong></p><p>கோவை, மே 13- மூளைச்சாவு ஏற்பட்ட 22 வயது இளைஞரின் உடலுறுப்பு கள் தானம் செய்யப்பட்ட நிலை யில், மூவர் மறுவாழ்வு பெற வுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியை சேர்ந்த வர் கருப்புசாமி (22). கடந்த மே 10 ஆம் தேதி காலை அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்த தாக மருத்துவர்கள் தெரிவித்த னர். இந்த துயரமான சூழலிலும், கருப்புசாமியின் குடும்பத்தினர் அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து அவரது கல்லீ ரல் கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறு நீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற் றொரு சிறுநீரகம் கோவையிலுள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன்பின் அவரது உட லுக்கு மருத்துவமனை முதல்வர், மருத்துவ அதிகாரிகள் அரசு மரியாதை செலுத்தினர்.</p>
