மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் உடல் உறுப்புகள் தானம்
17 Jun 2026, 10:33 pm
<p><strong>மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் உடல் உறுப்புகள் தானம்</strong> </p><p>வேலூர், ஜூன் 17 – சாலை விபத்தில் படுகாய மடைந்து மூளைச்சாவு அடைந்த புதுதில்லி அரசு ஊழியர் சீனிவா சன் (59) என்பவரின் உடல் உறுப்புகள் வேலூர் நறுவீ மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டன. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவரது மனைவி தீபா, மகள் வன்சிகா ஆகியோரின் ஒப்புதலின்படி, சீனிவாசனின் ஒரு சிறுநீரகம் சென்னை வேளச்சேரி தனியார் மருத்துவம னைக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நறுவீ மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இரண்டு கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குத் தானமாக அளிக்கப் பட்டன. இந்நிகழ்வின் போது வேலூர் கோட்டாட்சியர் செந்தில் குமார், வட்டாட்சியர் பழனி, மருத்துவமனை அதிகாரிகள் அனிதா சம்பத், டாக்டர் பால் ஹென்றி, ஜேக்கப் ஜோஸ், ராஜ சேகர் மற்றும் பிரசன்னா ஆகியோர் உடனிருந்தனர்.</p>
