தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!

2 Apr 2026, 5:30 am
விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!

விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!

சென்னை, ஏப். 1- விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வரும் பாஜக மற்றும் அதற்குத் துணை நிற்கும் அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து, திமுக-இந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியத் திருநாட்டில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாத அரசியலைப் பயன்படுத்தி மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் வேலையைப் பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. இத்தகைய பிரிவினைவாத அரசியலை அதிமுக முழுமையாக ஆதரிப்பதோடு, அரசியல் ரீதியாக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான வேளாண் கொள்கைகளை அமல்படுத்தியுள்ளனர். சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பால் பொருட்கள், பருத்தி, சர்க்கரை சோளம் உள்ளிட்டவற்றை ஒரு பைசா கூட இறக்குமதி வரி இன்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது இந்திய வேளாண் சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றும் செயலாகும். ஒன்றிய அரசு கொண்டு வந்த மின்சாரத் திருத்தச் சட்டம் 2020-ன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.