முந்தய பக்கம்

விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!

2 Apr 2026, 5:30 am
விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!

விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!

சென்னை, ஏப். 1- விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வரும் பாஜக மற்றும் அதற்குத் துணை நிற்கும் அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து, திமுக-இடதுசாரிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் விவசாய விரோதக் கூட்டணியைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram