தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொண்டையில் சிக்கிய ஆப்பிள் அரசு மருத்துவர் இன்றி சிறுவன் அவதி

13 Feb 2026, 5:58 pm
தொண்டையில் சிக்கிய ஆப்பிள் அரசு மருத்துவர் இன்றி சிறுவன் அவதி
<p><strong>தொண்டையில் சிக்கிய ஆப்பிள் அரசு மருத்துவர் இன்றி சிறுவன் அவதி</strong></p> <p>உடுமலை,பிப்.13- திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் காரத்தொழுவு பகுதியை சேர்ந்தவர் செல்வ குமார். இவரது இரண்டாவது மகன் ஒன்பது &nbsp;மாத குழந்தை. ஆப்பிள் துண்டை விழுங்கி யுள்ளார். அது தொண்டையில் சிக்கி மூச்சு &nbsp;விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். உடனடியாக மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு காலை 8.15 மணி அளவில் அழைத்து சென் றுள்ளனர். அங்கு செவிலியர்கள் மட்டுமே &nbsp;இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவர் வந்து விடுவார் என செவிலியர்கள் &nbsp;தெரிவித்துள்ளார். எனினும், குழந்தை மூச்சு &nbsp;விடுவதற்கு மிகவும் சிரமம் அடைந்ததால், உடனடியாக உடுமலையில் உள்ள தனியார் &nbsp;மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளிக்கப் படாததால் பொதுமக்கள் மற்றும் குழந்தை யின் உறவினர்கள் மருத்துவமனையை முற் றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மடத்துக்குளம் மருத்துவமனையில் ஏற்க னவே சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர் &nbsp;இல்லாத நிலையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் நோயாளியின் காயங்களுக்கு கட்டு &nbsp;போட்டு சிகிச்சை அளித்த காணொலி பெரும் &nbsp;சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பி டத்தக்கது. இது குறித்து மடத்துக்குளம் அரசு மருத் துவமனை தலைமை மருத்துவர் அருணாகுமாரியிடம் கேட்ட போது, இன்று &nbsp;காலை 8 மணி வரை தான் பணியில் இருந் ததாகவும், பின்னர் தீபக்குமார் என்ற மருத்து வர் பணிக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மடத்துக்குளம் மருத்துவமனையில் மொத்தம் ஏழு மருத்துவர்களுக்கு, ஐந்து மருத்துவர்கள் பணியில் உள்ளதாகவும், ஒரு வர் விடுமுறையில் உள்ள நிலையில் நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். இரண்டு காலி பணியிடங்கள் உள்ளதாகவும், மேலும் &nbsp;இருக்கும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.