ஏடிஎம் குப்பைத்தொட்டியிலிருந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>ஏடிஎம் குப்பைத்தொட்டியிலிருந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு</strong></p>
<p>நாமக்கல், நவ.16- ஏடிஎம் அறை குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.50 ஆயி ரத்தை எடுத்து காவல் நிலை யத்தில் ஒப்படைத்த சிறுவ னுக்கு போலீசார் பாராட்டு தெரி வித்தனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் அருகே உள்ள வளையக்காரனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) - புனிதா (34) தம்பதியினர், கட் டிட கூலி வேலை செய்து வருகின்றனர். இவர் களின் மகன் ஜினார்த் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சனியன்று இரவு சேலம் - கோவை புறவழிச்சாலையில் உள்ள வட்டமலை பகுதியில் இயங்கிவரும் தனி யார் ஏ.டி.எம்.இல் கார்த்திகேயன், ஜினார்த் ஆகியோர் பணம் எடுக்க சென்றனர். ஜினார்த் மட்டும் சென்று ஏடிஎம்-இல் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டிஎம் இயந்தி ரத்தின் அருகில் ரசீது கிழித்து போட வைக்கப் பட்ட குப்பைத்தொட்டியில் ரூ.50 ஆயிரம் கட்டு சீல் உடைக்கப்படாமல் இருந்தது கண்டு, அதை எடுத்து தன் அப்பாவிடம் கொடுத்துள்ளார். இதன்பின் குடும்பத்துடன் வந்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வா ளர் மாதேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட உதவி ஆய்வா ளர், சிறுவனுக்கு சால்வை அணிவித்து, புத்த கம் பரிசாக வழங்கி பாராட்டி வாழ்த்து தெரி வித்தார். இதனையறிந்த பொதுமக்களும் மாணவனை வெகுவாக பாராட்டினர்.</p>
<p> </p>
