தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: வனத்துறையினரின் அலட்சியம் என புகார்

27 May 2026, 11:45 pm
யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: வனத்துறையினரின் அலட்சியம் என புகார்

யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: வனத்துறையினரின் அலட்சியம் என புகார்

உதகை, மே 27 – கூடலூர் பாக்னா பகுதியில் காட்டு யானை தாக்கி 12 வயது சிறுவன் உயி ரிழந்த சம்பவத்தில், வனத்துறை அதி காரிகளின் அலட்சியமே காரணம் என வும், இவர்கள் மீது குற்றவியல் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் புகார் அளித் தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் நீலகிரி மாவட்டச் செயலாளர் இராசி இரவிக்குமார், பந்தலூர் ஏரியா செயலா ளர் பெரியார் மணிகண்டன், கூடலூர் ஏரியா செயலாளர் நவ்ஃபல் ஆகி யோர் நிலக்கோட்டை காவல் நிலையத் தில் அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதா வது, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் காட்டுயானைகள் அடிக் கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து, பொதுமக்களின் உயிருக் கும் உடைமைகளுக்கும் பெரும் அச் சுறுத்தலை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

இதுகுறித்து உள் ளூர் மக்கள், சமூக அமைப்புகள் சார் பில் பலமுறை வனத்துறைக்கு எழுத் துப்பூர்வமாக புகார்கள் அனுப்பப்பட் டும், மாவட்ட வன அலுவலகம் எவ் வித ஆக்கப்பூர்வ மான பாதுகாப்பு நடவடிக்கை களையும் மேற் கொள்ள வில்லை.

குறிப்பாக, யானைகள் அடிக் கடி நடமாடும் பாக்னா மற்றும் குடியிருப்புப் பகு திகளில் வனத்துறையினர் முறையான கண்காணிப்போ அல்லது போதிய ரோந்துப் பணிகளோ மேற்கொள்ள வில்லை. முன்கூட்டியே தகுந்த எச் சரிக்கை விடப்படவில்லை.

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க சூரிய சக்தி மின்வேலிகள், அகழிகள் அல்லது நவீன கண்காணிப்புக் கருவிகள் போன்ற நிரந்தர தடுப்பு ஏற்பாடு களை செய்யத் தவறியுள்ளனர்.

இப் பகுதியில் கடுமையான உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதை முன் கூட்டியே அறிந்திருந்தும், அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர்.

அதி காரிகள் தங்களின் சட்டப்பூர்வ கடமை களில் இருந்து முற்றிலும் தவறி யுள்ளனர்.

வனத்துறையினரின் இத்தகைய பொறுப்பற்ற தனமும், கடுமையான கடமை தவறுதலுமே சிறுவன் நிசாஃ பின் கொடூர மரணத்திற்கு நேரடி கார ணமாக அமைந்துள்ளது.

எனவே, சிறுவ னின் மரணத்திற்கு பொறுப்பான நீல கிரி மாவட்ட வன அலுவலர் மற்றும் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அலட்சியத் தால் மரணம் விளைவித்தல் என்ற குற் றத்திற்காக வழக்குப் பதிவு செய்து, உட னடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர்.

முன்னதாக யானை தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் நீதி கேட்டு திரளான பொதுமக்கள் மறியலில் ஈடு பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.