தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போர்வெல் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

11 Jan 2026, 5:58 pm
போர்வெல் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
<p><strong>போர்வெல் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்</strong></p> <p>நாமக்கல், ஜன.11- ரிக் தொழிலை பாதுகாக்க ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ கம் முழுவதும் போர்வெல் வாகன &nbsp;உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட போர்வெல் வாக னங்கள் இயங்கி வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங் காக உயர்ந்துள்ளது. ரூ.25 ஆயிரத் திற்கு கிடைத்து வந்த இந்த பொருள், தற்போது ரூ.55 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் &nbsp;சீனாவிலிருந்து இறக்குமதி செய் யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவ டிக்கை எடுத்து விலை உயர்வை &nbsp;கட்டுப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி இந்தியா முழுவதும் ஆங் காங்கே போர்வெல் உரிமையாளர் கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் தேனி, &nbsp;கரூர், திருப்பூர், திருச்செங்கோடு, சேலம், நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட &nbsp;பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு ரிக் &nbsp;உரிமையாளர்கள் சம்மேளனத் தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறு கையில், கடந்த 15 நாட்களில் ரிக் &nbsp;வாகனத்திற்கு தேவைப்படும் பிட் &nbsp;இரண்டு மடங்கு விலை உயர்ந்துள் ளது. இந்த விலை உயர்வை கட்டுப் படுத்தி உரிய விலையில் ஒன்றிய &nbsp;அரசு வழங்க வேண்டும். சீனாவி லிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஒன்றிய அரசு ரிக் &nbsp;தொழிலை பாதுகாக்க நடவடிக்கை &nbsp;எடுக்க வேண்டும். தமிழக அரசும் &nbsp;காவல்துறையும், ரிக் வாகனங்கள் &nbsp;தொடர்பான வழக்குகள் விவகாரங் களில் எங்களுக்கு துணை நின்று, எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி &nbsp;ரூபாய் வரியாக தமிழக அரசுக்கு &nbsp;வழங்கி வருகிறோம். அதே போன்று ஒன்றிய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச் சனைகளை ஒன்றிய, மாநில அரசு கள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இந்த விலை உயர்வால், 20 &nbsp;சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் படும் என தெரிய வருகிறது. தேனி, &nbsp;கரூர் போன்ற மாவட்டங்களில் தற் போது 20 சதவீத கட்டண உயர்வு டன் போர்வெல் வாகனங்கள் இயங் கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாக னங்கள் தங்கள் போர்வெல் கட்ட ணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த &nbsp;வாய்ப்பு உள்ளதாக கூறப்படு கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.