தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூத் சீட்டு வழங்கும் பணி இன்று தொடக்கம்

12 Apr 2026, 5:30 am
பூத் சீட்டு வழங்கும் பணி இன்று தொடக்கம்

பூத் சீட்டு வழங்கும் பணி இன்று தொடக்கம்

சென்னை, ஏப்.11 - தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் அதிகாரிகள் பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 6.23 கோடி வாக்காளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். வேட்பாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல இடங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றைத் தேர்வு செய்து அனுப்பும் பணி ஏப்.11 ஆம் தேதி தொடங்கியுள்ளது.

வாக்காளர்களுக்குத் தகவல் சீட்டு (பூத் சீட்டு) வழங்கும் பணி ஏப்ரல் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இ.யு.ஆர். கோடுடன் அச்சிடப்பட்டுள்ள இந்த சீட்டில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண் ஆகியவை தெளிவாக இடம் பெற்றுள்ளன.

பொதுமக்கள் வாக்குச் சாவடிகளுக்கு எளிதாகச் சென்று வாக்களிக்கும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஏப்.12 முதல் 17 ஆம் தேதிக்குள் விநியோகத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விநியோகத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால், இம்முறை சென்னையில் மட்டும் ஒருமுறை மொத்தமாக அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வீதி வீதியாகச் சென்று பூத் சீட்டு வழங்குவதை தடுக்கும் நோக்கில் அரசு ஊழியர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீடு பூட்டப்பட்டிருந்தால் வாக்குச் சீட்டு வழங்கும் முறை இல்லை. வாக்காளர் வீட்டில் யாரும் இல்லையெனில் அருகில் உள்ள வீடுகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும். பூத் சீட்டை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது என்பதை வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.