முந்தய பக்கம்

புத்தகத் திருவிழாவில் ரூ.1.25 கோடி புத்தகம் விற்பனை

3 Feb 2026, 4:00 pm
புத்தகத் திருவிழாவில் ரூ.1.25 கோடி புத்தகம் விற்பனை
<p><strong>புத்தகத் திருவிழாவில் ரூ.1.25 கோடி புத்தகம் விற்பனை</strong></p> <p>திருப்பூர், பிப்.3- 22 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவில் ஏறத்தாழ ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்த னர். ரூ.1.25 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது என்று புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரி வித்தனர். &nbsp;தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் &nbsp; பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து 22 &nbsp;ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை மொத்தம் 11 நாட்கள் நடத் திய நிலையில், செவ்வாயன்று &nbsp;நிறைவு பெற்றது. &nbsp;இப்புத்தகத் திருவிழாவை முன் னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மாணவ மாணவியர் கலை இலக் கிய திறனாய்வு போட்டிகளில் 10 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து வினாடி வினா, &nbsp;அச்சு ஓவியப்போட்டி போன்றவை நடத்தப்பட்டதில் மழலைகள் உட் பட 2500 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு புத்தகக் கண்காட் சியை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள், இளை ஞர்கள் என அனைத்து தரப்பினரும் &nbsp;ஆர்வத்துடன் இங்கு வருகை தந்த னர். &nbsp;இந்த ஆண்டு புத்தகக் கண் காட்சியில் பங்கேற்ற பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப் படையில் ரூ. 1 கோடியே 25 லட்சம் &nbsp;மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை யானதாக புத்தகத் திருவிழா &nbsp;ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புத்தகத் திருவிழா நடைபெற்ற &nbsp;வேலன் &nbsp;ஹோட்டல் மைதானத்தில் &nbsp;திருவள்ளுவர், பகத்சிங், அம்பேத் கர், பெரியார், அண்ணா, கலைஞர், &nbsp;விவேகானந்தர் உள்ளிட்ட படங்கள் &nbsp;கொண்ட தற்பட முனையம் (செல்பி &nbsp;கார்னர்) அமைக்கப்பட்டிருந்தது. இங்கு குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை பல்லாயிரக்கணக்கா னோர் ஆர்வமுடன் தற்படம் எடுத் துச் சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram