தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ரூ.1.25 கோடி புத்தகம் விற்பனை

3 Feb 2026, 4:00 pm
திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ரூ.1.25 கோடி புத்தகம் விற்பனை
<p><strong>திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ரூ.1.25 கோடி புத்தகம் விற்பனை</strong></p> <p>திருப்பூர், பிப்.3 - &nbsp;22 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவில் ஏறத்தாழ ஒரு லட்சம் பார்வை யாளர்கள் வருகை தந்தனர். ரூ.1.25 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையா னது என்று புத்தகக் கண்காட்சி ஏற் பாட்டாளர்கள் தெரிவித்தனர். &nbsp;தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் &nbsp;பின்னல் புக் &nbsp;ட்ரஸ்ட் இணைந்து 22 ஆவது திருப்பூர் &nbsp;புத்தகத் திருவிழாவை மொத்தம் 11 &nbsp;நாட்கள் நடத்திய நிலையில், செவ்வா யன்று &nbsp;நிறைவுபெற்றது. &nbsp;இப்புத்தகத் திருவிழாவை முன் னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு &nbsp;பகுதிகளில் நடத்தப்பட்ட மாணவ மாண வியர் கலை இலக்கிய திறனாய்வு போட்டிகளில் 10 ஆயிரத்து 500 பேர் பங் கேற்றனர். இதைத்தொடர்ந்து வினாடி &nbsp;வினா, அச்சு ஓவியப்போட்டி போன்றவை நடத்தப்பட்டதில் மழலை கள் உட்பட 2500 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு புத்தகக் கண் காட்சியை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் &nbsp;பார்வையிட்டு சென்றுள்ளனர். பெண் கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் இங்கு வருகை தந்தனர். &nbsp;இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி யில் பங்கேற்ற பதிப்பகங்கள் மற்றும் &nbsp;விற்பனையாளர்களிடம் சேகரிக்கப் பட்ட தகவலின் அடிப்படையில் ரூ. 1 &nbsp;கோடியே 25 லட்சம் மதிப்புள்ள புத் தகங்கள் விற்பனையானதாக புத்தகத் &nbsp;திருவிழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த னர். புத்தகத் திருவிழா நடைபெற்ற வேலன் &nbsp;ஹோட்டல் மைதானத்தில் திரு வள்ளுவர், பகத்சிங், அம்பேத்கர், பெரி யார், அண்ணா, கலைஞர், விவே கானந்தர் உள்ளிட்ட படங்கள் கொண்ட தற்பட முனையம் (செல்பி கார்னர்) அமைக்கப்பட்டிருந்தது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானோர் ஆர் வமுடன் தற்படம் எடுத்துச் சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.