முந்தய பக்கம்

நூல் வெளியீட்டு விழா

30 Mar 2026, 3:40 pm
                நூல் வெளியீட்டு விழா
<p><strong>நூல் வெளியீட்டு விழா</strong></p> <p>கோவை, மார்ச் 30- துடியலூரில் &rsquo;இதய மொழியின் உதய ராகம்&rsquo; நூல் &nbsp;வெளியீட்டு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், துடியலூர் சிஐடியு அலுவல கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் &rsquo;இதய மொழியின் உதய ராகம்&rsquo; நூல் &nbsp;வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந் நிகழ்விற்கு, தமுஎகச துடியலூர் கிளைத் தலைவர் அ. சண்முகம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சூரியபிரகாஷ் வரவேற்றார். தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவி ஞர் தங்கமுருகேசன் நூலை வெளியிட்டுச் சிறப்புரை யாற்றினார். நூலின் முதல் பிரதியை ஆனந்தா புர மோட்டர்ஸ் ஆறுமுகம், சாந்தாராம், தஞ்சை தமிழ் வாணன், ராமதாஸ், ரமேஷ், நாகை ஆசைத்தம்பி ஆகி யோர் பெற்றுக்கொண்டனர். நூலைப் பற்றிய அறிமுக &nbsp;உரையை கவிஞர் சுடர்விழி வழங்கினார். இரா. மனோன் மணி ஏற்புரையாற்றினார். தமுஎகச மாவட்டத் தலை வர் காளிநாதன், செயலாளர் அ.கரீம், மாவட்ட நிர்வாகி கள் தி.மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram