முந்தய பக்கம்

வேலூரில் ‘இதயம் கலந்த எம்ஜிஆர்’ நூல் வெளியீடு

19 Jan 2026, 2:23 pm
வேலூரில் ‘இதயம் கலந்த எம்ஜிஆர்’ நூல் வெளியீடு
<p><strong>வேலூரில் &lsquo;இதயம் கலந்த எம்ஜிஆர்&rsquo; நூல் வெளியீடு</strong></p> <p>வேலூர், ஜன. 19- வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு சொற்பொழிவு மற்றும் கவிஞர் வசந்த நாயகன் எழுதிய &lsquo;இதயம் கலந்த எம்ஜிஆர்&rsquo; நூல் வெளியீட்டு விழா வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கோ.விசுவநாதன் பேசுகையில், &nbsp;&ldquo;எம்ஜிஆர் அளித்த ஊக்கத்தால் தான் விஐடி பல்கலைக்கழகம் உருவானது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, சத்துணவுத் திட்டம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் என பல வரலாற்றுச் சாதனைகளை அவர் படைத்துள்ளார். தற்போது தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை, மாணவர்களின் கல்வி நலன் கருதி அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்&rdquo; என்று கோரிக்கை விடுத்தார். விஐடி துணைத் தலைவர் கோ.வி.செல்வம் பேசுகையில், எம்ஜிஆர் ஏழைகளின் துயர் துடைக்க பாடுபட்டார் என்றும், சாதிப் பெயர்களை நீக்கியது மற்றும் சிறந்த தலைமைப் பண்புடன் விளங்கியது குறித்தும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கவிஞர் முத்துலிங்கம், பாரதிதாசன் விருதை அறிமுகப்படுத்தியவர் எம்ஜிஆர் என பேசினார். துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், பேராசிரியர்கள் மரிய செபஸ்தியான், வினோத்பாபு உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram