“தஞ்சை சமவெளி நாகரிகம் வரலாற்று ஆவணக் கருவூலம்’’ நூல் வெளியீட்டு விழா
28 Feb 2026, 2:29 pm
<p><strong>“தஞ்சை சமவெளி நாகரிகம் வரலாற்று ஆவணக் கருவூலம்’’ நூல் வெளியீட்டு விழா</strong></p>
<p>திருத்துறைப்பூண்டி, பிப்.28- தஞ்சை சமவெளி வரலாற்று ஆய்வு மையத்தின் நிறுவனர் இடையூர் மணிமாறனின் பெரும் முயற்சியில் 1799 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான ஆற்றல்மிகு பேராளுமைகள் பற்றிய வரலாற்றுக் கலைக்களஞ்சியமாக “தஞ்சைச் சமவெளி நாகரிகம் வரலாற்று ஆவணக் கருவூலம்’’ என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள், ஐம்பெரும் நூல் வெளியீட்டு விழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஆய்வு மேற்கொண்டு நூலை எழுதிய பாரதமாதா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆய்வு மையத்தின் நிறுவனர் இடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார். ஆயிரக்கணக்கான ஆளுமைகளின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நாகை எம்பி செல்வராஜ் புத்தகத்தை வெளியிட, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து பெற்றுக் கொண்டார். நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூலகர் ஆசை தம்பி நன்றி கூறினார்.</p>
