தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 Feb 2026, 3:55 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மயிலாடுதுறையில் பிப்.27 முதல் புத்தக திருவிழா

மயிலாடுதுறை, பிப்.27-  மயிலாடுதுறையில் பிப்.27 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.  தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளா கத்தில் 10 நாட்கள் நடைபெறவுள்ள புத்தக திருவிழா, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீர்  கூட்டத்தில் 954 மனுக்கள்

புதுக்கோட்டை, பிப்.24-  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 954 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கே. முத்துச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கார் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூர், பிப்.24-  தஞ்சாவூர் அருகே, மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கோபி(53) என்ற மளிகைக் கடை உரிமையாளர், கடையை திறப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் மாரியம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திருவாரூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கார், கோபி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபி உடலை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான சிவகாசி பகுதியை சேர்ந்த திருமுருகனை (51) பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையத்தில்  சாக்கு தட்டுப்பாட்டை சீர் செய்ய கோரிக்கை

பாபநாசம், பிப்.24-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில், சம்பா அறுவடை 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் பாபநாசம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.  ஆனால், கடந்த சில நாட்களாக பாபநாசம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு தட்டுப்பாடு காரணமாக, நெல்லைக் கொட்டி வைத்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.  இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறுகையில், “நெல் கொண்டு வந்து 10 நாளாகிறது. படுதாவிற்கு தினமும் ரூ.300 வாடகை தர வேண்டியுள்ளது. இங்கு பல ஆயிரம் மூட்டைக்குரிய நெல்லைக் கொட்டி வைத்து விட்டு விவசாயிகள் காத்திருக்கின்றனர். வெயில், பனியில் கிடக்கிறது. மழை பெய்தால் பாதிப்பு விவசாயிகளுக்குத்தான். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வேண்டும்’ என்றார்.

தஞ்சை புதிய மீன் மார்க்கெட்டில் கடைகளுக்கு டெபாசிட், வாடகையை குறைக்க வேண்டும் மீன் வியாபாரிகள் போராட்டம்

தஞ்சாவூர், பிப்.24- தஞ்சாவூர் கீழவாசலில் இருந்த மீன் மார்க்கெட் கட்டிடம் சேதம் அடைந்ததையடுத்து, அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில், தரை மற்றும் முதல் தளத்தில் மொத்தம் நூறு கடைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய மீன் மார்க்கெட்டில், கடை ஒன்றுக்கு ரூ.3 லட்சம் டெபாசிட் தொகையாகவும், மாதம் ரூ.10 ஆயிரம் வாடகையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இவ்வளவு பெரிய தொகை செலுத்த முடியாது. எனவே, டெபாசிட் வாடகையை குறைக்க வேண்டும் என்று மீன் வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் டெபாசிட், வாடகை தொகையை குறைக்காததால்  கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப் போவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் வெள்ளைப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் கண்ணன் தலைமையில், செயலாளர் அப்துல் ரகுமான் முன்னிலையில் ஏராளமான மீன் வியாபாரிகள், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  அப்போது, மீன் வியாபாரிகளின் இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஆதரவு தெரிவித்து, பேரமைப்பு மாவட்ட தலைவர் எம்.என். துரை, மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் தாமரைச் செல்வன், இளைஞரணி செயலாளர் ஜெயம் ரமேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

பிப்.27 குமரியில் எரிவாயு  நுகர்வோர் குறைதீர்  கூட்டம்

நாகர்கோவில்,பிப்.24- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர்  கூட்டம்  27.02.2026 அன்று பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள்,எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாநில ,மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

ஈர நிலங்களை பாதுகாக்க கருத்தரங்கம்

தென்காசி, பிப்.24- தென்காசி மாவட்ட வன ஓய்வு விடுதி கூட்டரங்கில் பிப்ரவரி 24 அன்று மாவட்ட வனத்துறை சார்பில் ஈர நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சி்யர் ஏ.கே.கமல்கி ஷோர் தலைமையில், மாவட்ட வன அலுவலர் முனைவர்.ரா. ராஜ்மோகன். முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான ஈர நிலப்பகுதியை மேம்பாடு செய்வதற்கு, ராம்சார் நிலங்களை அடையாளப் படுத்துவதற்கும் உரிய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க  கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர், பிப்.24-  மாணவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான க்யூட் (CUET UG 2026) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை (NTA) நீட்டித்துள்ளது.  இந்த முக்கிய முடிவு தேசிய தேர்வு முகமை எடுத்துள்ளது. இதனை அடுத்து திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் சேர்வதற்கான நீட்டிப்பு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக் கழகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் பிப்.26 ஆம் தேதி வரை ஆன்லைன் https://cuet.nta.nic.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தமிழ் பாசறையின் 17 ஆம் ஆண்டு விழா

பொன்னமராவதி, பிப்.24-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், முத்தமிழ் பாசறையின் 17 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தமிழாசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பாசறையின் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் மாணிக்கவேலு, செயலாளர் சந்திரன், பொருளாளர் சதாசிவம், பாசறை செயலாளர் தேனப்பன் பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு தலைவர் பொறியாளர் பழனியப்பன் வரவேற்றார்.  விழாவில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி முதல்வர் தங்க ரவிசங்கர், மக்கள் இசை பாடகர் வைகை பிரபா ஆகியோருக்கு, தமிழ் சுடர் விருது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாசறை பட்டய விருது, மாணவர்களை பயிற்றுவித்த தமிழாசிரியர்களுக்கு தொல்காப்பியர் விருது ஆகிய விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

கத்தரிப்புலம் ஊராட்சியில் நிலவும்  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், பிப்.24-  நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் ஊராட்சியில் உள்ள வியாழன் சந்தையடி என்னும் இடத்தில், கடந்த நான்காண்டு காலமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் சரிவர கிடைக்காததால், குடிநீர் கேட்டு போராடி வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாயன்று கத்தரிப்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திர பூபதி தலைமையில், வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ. ராஜா, எஸ். அம்பிகாபதி, ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ். முருகையன் மற்றும் கிராம மக்கள் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர், விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை அடுத்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.