முந்தய பக்கம்

அரசுப்பள்ளியில் புத்தகக் கண்காட்சி

15 Nov 2025, 4:09 pm
அரசுப்பள்ளியில் புத்தகக் கண்காட்சி
<p><strong>அரசுப்பள்ளியில் புத்தகக் கண்காட்சி</strong></p> <p>பொள்ளாச்சி, நவ.15- சோமந்துறை, சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் புத்தகக் கண்காட்சி நடை பெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சோமந்துறை சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளியன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்வில், பள்ளியின் வாசிப்பு இயக்கத்தின் &nbsp;சார்பாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில், &nbsp;மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு புத்தகங் களை பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். அதோடு ஒவ் வொரு வகுப்பறையும் ஒரு மரக்கன்று என்ற விதத்தில் &nbsp;ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டு, அதற்கு தனக்கு பிடித்தமான பெயர் &nbsp;சூட்டி மகிழ்ந்தனர். பின்னர், மாணவர்களின் தனித் திறமை வெளிப்படும் விதமாக கலை இலக்கிய நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முடிவில், தமிழாசிரியை விஜயலட்சுமி நன்றி கூறி னார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram