முந்தய பக்கம்

நூல் வெளியீட்டு விழா

2 Feb 2026, 4:51 pm
             நூல் வெளியீட்டு விழா
<p><strong>நூல் வெளியீட்டு விழா</strong></p> <p>கோவை, பிப்.2- &ldquo;காடு - கடல் இனி நமக்கில்லை&rdquo; என்ற நூல் வெளியீட்டு &nbsp;விழா கோவையில் ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க &nbsp;மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் எழுதிய &ldquo;காடு - கடல் &nbsp;இனி நமக்கில்லை&rdquo; என்ற நூல் வெளியீட்டு விழா, கோவை &nbsp;தாமஸ் கிளப்பில் ஞாயிறன்று நடைபெற்றது. பழங்குடி மக்க ளின் பாடல்கள், இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிகழ்வில், &nbsp;பழங்குடியின மருத்துவ மாணவி எம்.சங்கவி நூலினை வெளி யிட்டார். ஓசை காளிதாசன், பசுமைப் போராளி மா.யோகநா தன், சூழலியல் எழுத்தாளர் கோ.லீலா, பழங்குடி மக்கள் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் ப.கருப்புசாமி, தமிழ்நாடு ஆதிவாசிகள் &nbsp;கூட்டமைப்பின் கே.பாலன் மற்றும் பலர் நூலை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.பொன்னுசாமி கருத் துரையாற்றினார். நூலாசிரியர் மு.ஆனந்தன் ஏற்புரையாற்றி னார். இதில், எழுத்தாளர் ச.பாலமுருகன், பழங்குடி மக்கள் &nbsp;செயற்பாட்டாளர் வி.எஸ்.பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், க.பிரியங்கா நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram