நூல் அறிமுக நிகழ்ச்சி
9 Mar 2026, 4:24 pm
<p><strong>நூல் அறிமுக நிகழ்ச்சி</strong></p>
<p>கோவை, மார்ச் 9- ’’பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம்’’ என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி கணபதியில் நடைபெற்றது. தடம் இலக்கிய வட்டம் சார்பில் ’’பிரிவினைக்கான இட மல்ல திருப்பரங்குன்றம்’’ என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி ஞாயி றன்று கோவை கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சமூக ஒற்றுமை மற்றும் சமத்துவம் குறித்து பேசும் முக்கியமான படைப்பாக உள்ள இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பெரோஸ் பாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எழுத்தா ளர் ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர் ச.பாலமுருகன், தமுஎ கச மாவட்டச் செயலாளர் அ.கரீம் உள்ளிட்டோர் நூல் குறித்து கருத்துரையாற்றினர். நிறைவாக நூல் ஆசிரியர் சுஜாதா சிவ ஞானம் ஏற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நவாஸ் நன்றி கூறினார்.</p>
